திருச்சி எம்.ஆர்.பாளையம் மறுவாழ்வு மையம் வந்தது யானை ரோகிணி

திருச்சி எம்.ஆர்.பாளையம் மறுவாழ்வு மையம் வந்தது யானை ரோகிணி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வன சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தனியாரால் வளர்க்கப்பட்ட ரோகிணி என்ற பெண் யானை கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு படி வனத்துறையால் மீட்கப்பட்டு கோவை மாவட்டம் டாப்சிலிப் கோழிகமுத்தியில் உள்ள யானைகள் முகாமில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது அங்கு நாளடைவில் ரோகிணி யானையின் எடை குறைந்து உடல் மெலிந்தது இதையடுத்து ஓய்வு பெற்ற கூடுதல் இயக்குனர் டாக்டர் மனோகரன் கோவை வன கால்நடை அலுவலர் டாக்டர்  சுகுமார் வன உயிரின அறிஞர் டாக்டர் சிவலிங்கம் உள்ளிட்டோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு, கடந்த சில மாதங்களாக ரோகினி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.

அதில் ராஜபாளையத்தில் தனியாரிடம் இருந்தபோது ஓர் ஒற்றை கவனிப்பில் அலைச்சல் இன்றி வளர்ந்து வந்த அந்த யானை வனப்பகுதிக்கு வந்த பின் புதிய சூழ்நிலை புதிய உணவு முறையை ஏற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டதாலும், பல் வலி காரணமாக சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டதாலும் யானை ரோகிணியின் உடல் மெலிந்து வருவது கண்டறியப்பட்டது. 

அதனை தொடர்ந்து அந்த யானையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரும் முயற்சியில் மருத்துவக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக யானை ரோகிணியை கோழிகமுத்தி முகாமில் இருந்து நேற்று அதிகாலையில் திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள எம்.ஆர் பாளையத்தில் உள்ள யானை மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு வனத்துறை அதிகாரிகள் மருத்துவ குழுவினர் நிறைவேற்றிய முகாமுக்கு கொண்டு சென்றனர். 

கோவை கால்நடை அலுவலர் டாக்டர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் அங்கு முகாமிட்டு யானையின் உடல் நலத்தை கண்காணித்து வருகின்றனர். 23 வயதாகும் ரோகிணிக்கு வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு ஆய்வு செய்ததில் அந்த யானையை இடமாற்றம் செய்து உணவு மற்றும் சிகிச்சைக்கு தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

எம்.ஆர் பாளையம் சரியாக இருக்கும் என தெரிந்ததால் இங்கு கொண்டு வந்துள்ளோம் இங்குள்ள சூழ்நிலையை அதற்கு ஏற்ற வகையில் உள்ளது யானை ரோகிணி 400 கிலோ வரை எடை குறைந்து தற்போது 3400 கிலோவாக இருக்கிறது இந்துக்கள் இதை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்கிறோம் அதன் உடல் நிலை ஆரோக்யமாக உள்ளது தேவையான அளவுக்கு தீவனம் உட்கொள்கிறது என்று என்றார் டாக்டர் சுகுமார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Eyd4BfTFH1SEyxmvvYevul

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn