இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு பகுதி குழு 4 வது மாநாடு

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு பகுதி குழு 4 வது மாநாடு 15/05/2025 வியாழக்கிழமை காலை 10. 00 மணிக்கு நந்தி கோவில் தெருவில் இருந்து பேரணியாக புறப்பட்டு ஸ்ரீ சுருதி மகாலில் நடைபெற்றது. V . சரவணன் A . புஷ்பா தலைமை குழுவாக செயல்பட்டனர்.மூத்த தோழர் P.ராஜா கொடியேற்றினார்கள்.
R . ஜெயக்குமார் வரவேற்புரையாற்றினார்.S. சையத் உசேன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார்கள்.பகுதி குழு செயலாளர் S. செய்யது அபுதாகிர்வேலை அறிக்கையை முன் வைத்தார்கள். மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் தோழர். M . செல்வராஜ்மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார்கள்.K . சுரேஷ் M.C மாமன்ற உறுப்பினர்,S . சிவா
மாவட்ட செயலாளர்,A . அன்சார்தீன்தரைக்கடை மாவட்ட செயலாளர்,R . சுரேஷ் முத்துச்சாமிமேற்கு பகுதி செயலாளர்,M.R . முருகன்மணிகண்டம் ஒன்றிய செயலாளர்,A . ராஜாபொன்மலை பகுதி செயலாளர்உள்ளிட்ட தோழர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.வரவு செலவு கணக்குR . ஜெயக்குமார் சமர்ப் பித்தார்கள். புதிய நிர்வாகிகள் தேர்வு: புதியபகுதி செயலாளராக S . செய்யது அபுதாஹிர்,
துணைச் செயலாளர்களாக
S . சையது உசேன்
U . அகமது அன்சாரி
பொருளாளர்
R . ஜெயக்குமார்ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
பகுதிக்குழு உறுப்பினர்களாக :
A . அன்சர்தின்
S . செய்யத் அபுதாஹிர்
R. ஜெயக்குமார்
K. K. முருகேசன்
S . சையது உசேன்
V . சரவணன்
M . அருண்குமார்
A . புஷ்பா
N . நாக பாலசுப்பிரமணியம்
T . ரெங்க பாலன்
U . அகமது அன்சாரி
நவீத்தேர்வு செய்யப்பட்டனர்.
மாநாட்டு தீர்மானம் :
13 மற்றும் 14 வார்டுகளுக்கு உட்பட்ட தரைக் கடைகளை முறையாக தேர்தல் நடத்தி அவர்களை அந்தந்த இடத்திலேயே வியாபாரம் செய்யக்கோரியும், N. S .B ரோட்டில் கழிப்பிடம் மட்டும் குடிநீர் வசதி செய்து தரக் கோரி, 19 மற்றும் 20 வார்டுகளில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்தும் சாலைகள் முழுமையாக மூடப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக் குள்ளாவதால் சாலையை முழுமையாக முடிக்க கோரியும், E. B ரோடு தாராநல்லூர் பகுதிகளில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளதால் சமூக விரோத குற்ற செயல்களை காவல்துறை தடுத்து நிறுத்த கோரியும், 21 வார்டுக்கு உட்பட்ட ஜீவா நகர்,
கல்யாணசுந்தரபுரம் ,நத்தர்ஷா பள்ளிவாசல், ஜலால் குதிரி தெரு ,ஜலால் பக்கிரி தெரு, உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகள் ஏற்கனவே 21 வார்டுக்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் காண்பித்ததை இப்போது பாபு ரோட்டில் உள்ள
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாற்றியதால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகுவதால் மீண்டும் 21 வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அளிக்க கோரியும்,ஓயாமாரி இடுகாட்டில் உள்ள பொதுக் கழிப்பிடம் குளியலறை ஆகியவை முறையான பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது மாநகராட்சி நிர்வாகம் அங்குள்ள பொதுக் கழிப்பிடத்தில் தண்ணீர் வசதி செய்து கொடுத்து சுகாதாரமாக வைக்கக் கோரியும், ஒன்றிய அரசை கண்டித்து வருகின்ற ஜூன் 9 ஆம் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கிழக்கு பகுதி குழு, மற்றும் தரைக் கடை வியாபாரிகள் அனைவரும் முழுமையாக கடையினை அடைத்து மறியலில் பங்கேற்று கைதாவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் அஹமது
அன்சாரிநன்றி கூறினார்கள்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட 24 வது மாநாடு ஜூன் 24 25 தேதிகளில் அன்னதான சத்திரம் திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கிறது அதற்கான வரவேற்பு குழுவும் இன்று அமைக்கப்பட்டது வரவேற்பு குழு தலைவராக . க.சுரேஷ் M.C, செயலாளராக A. அன்சர்தீன், பொருளாளராக
நாகபாலசுப்பிரமணியன் மற்றும் இணைச் செயலாளராக எஸ். சையது அபுதாஹிர், துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய..
.. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision