திருச்சியில் ஜல்லிக்கட்டிற்கு ஆன்லைன் பதிவு கைவிட வலியுறுத்தி காளை வளர்ப்போர் நூதன போராட்டம்

திருச்சியில் ஜல்லிக்கட்டிற்கு ஆன்லைன் பதிவு கைவிட வலியுறுத்தி காளை வளர்ப்போர் நூதன போராட்டம்

தமிழகம் முழுவதும் வருகின்ற பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் களை கட்டவிருக்கிறது. இதற்காக காளை வளர்ப்போர் தங்களது காளைகளை உற்சாகமாக தயார் செய்து வருகின்றனர்.இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் அனைத்தும் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால், ஒரு காளை அதிகபட்சமாக ஒன்றிரண்டு போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும். மேலும், காளை வளர்ப்போர் விருப்பப்படும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்படும்.எனவே, ஆன்லைன் ஜல்லிக்கட்டு முறையை கைவிட வேண்டும் வலியுறுத்தும் காளை வளர்ப்போர், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருச்சியில் நூதன போராட்டம் நடத்தினர்.

திருவானைக்காவல் மேல கொண்டயம்பேட்டையை சேர்ந்த காளை வளர்ப்போர், தங்களது பத்துக்கும் மேற்பட்ட காளைகளை, ஜல்லிக்கட்டுக்கு அழைத்துச் செல்வதுபோல அலங்கரித்து தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.அலங்கரிப்பட்ட காளைகளின் அணிவகுப்பு, அப்பகுதி மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.