திருச்சி மாநகராட்சியிடம் மாட்டிக்கொண்ட 76 மாடுகள்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரிந்த 18 கன்றுகள் உள்பட 76 மாடுகள் (19.11.2021) அன்று பிடிக்கப்பட்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ளது. சுகாதார ஆய்வர்கள், சுகாதார அலுவலர் மற்றும் பணியாளர்களைக்
கொண்டு ஸ்ரீரங்கம் கோட்ட உதவி ஆணையர் ஏ.அக்பர்அலி தலைமையில் 16 மாடுகள் மற்றும் 2 கன்றுகளையும், அரியமங்கலம் கோட்ட உதவி ஆணையர் எஸ்.கமலக்கண்ணன் தலைமையில் 9 மாடுகள் மற்றும் 6 கன்றுகளையும்,
பொன்மலை கோட்ட உதவி ஆணையர் எம்.தயாநிதி தலைமையில் 17 மாடுகள் மற்றும் 6 கன்றுகளையும், கோ.அபிசேகபுரம் கோட்ட உதவி ஆணையர் எஸ்.செல்வபாலாஜி தலைமையில் 16 மாடுகள் மற்றும் 4 கன்றுகளையும் பிடித்துள்ளனர். மேற்படி மாடுகள் மற்றும் கன்றுகளின் உரிமையாளர்கள் முதல் முறை என்பதால்
பிடிபட்ட கால்நடையின் பராமரிப்பு செலவுத் தொகையுடன் அபராத தொகையினையும் அரசு கருவூலத்தில் செலுத்தி மூன்று தினங்களுக்குள் திரும்ப அழைத்துச் செல்லுமாறும், அடுத்தமுறை இதே நடவடிக்கை தொடருமாயின் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn