திருச்சிக்கு 82 டன் ஆக்சிஜன் ரயிலில் வந்தது.

திருச்சிக்கு 82 டன் ஆக்சிஜன் ரயிலில் வந்தது.
மத்திய பிரதேச மாநிலம் ரூர்கேலாவிலிருந்து 82 டன் திரவ ஆக்சிஜன் சரக்கு ரயில் மூலம் திருச்சிக்கு வந்தடைந்தது.  4 வேகன்களில் வந்துள்ள  சிலிண்டர்கள்  ராட்சத கிரேன் உதவியுடன் ரயிலிலிருந்து இறக்கப்பட்டு, அதன் பின்னர் லாரிகளில் ஏற்றும் பணி நடைபெற்றது. லாரிகளில் ஏற்றப்பட்ட ஆக்சிஜன் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த வாரம் ஒடிசாவிலிருந்து( என்பது  ) 80 டன் திரவ ஆக்ஸிஜன் வந்தது. 12 மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டது. தற்பொழுது திருச்சி அரசு மருத்துவமனை ,மணப்பாறை, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு போதுமான அளவு ஆக்சிஜன் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve