மணப்பாறையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு 9 குளங்கள் நிரம்பியது - பொதுமக்கள் குளித்து மகிழ்ச்சி

மணப்பாறையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு 9 குளங்கள் நிரம்பியது - பொதுமக்கள் குளித்து மகிழ்ச்சி

திருச்சி மாவட்டம் மணப்பாறை மாவட்டத்திலேயே வறண்ட பகுதியாக இருந்து வந்த நிலையில், கடந்த 2015 அக்டோபர் மாதத்திற்கு பிறகு 16 ஆண்டுகளுக்கு பின் நிகழாண்டு செப்டம்பர் 24 முதல் பெய்து வரும் தொடர் கனமழையால் பெரும்பான குளம்,, குட்டைகள் நிரம்பியுள்ளன. மணப்பாறை ஒன்றியத்தில் வடக்கு பகுதிகளான புத்தாநத்தம் முதல் சித்தாநத்தம் வரையிலும், வையம்பட்டி ஒன்றியத்தில் மலையடிப்பட்டி, வேங்கைகுறிச்சி உள்ளிட்ட பகுதிகளிலும், மருங்காபுரி ஒன்றியத்தில் வளநாடு சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக கனமழை நீர் வரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்பகுதிகளில் கிணறுகள் தரை மட்ட நீர அளவை எட்டியுள்ளது. இந்நிலையில், மணப்பாறை பகுதியில் பெரிய குளங்களான மரவனூர் பெரியக்குளம், மணப்பாறை பெரியக்குளம், கருப்பூர் குளம், பிச்சம்பட்டிக்குளம், பின்னத்தூர் குளம், பொய்கைப்பட்டி ஆவிக்குளம், கல்பாளையத்தான்பட்டி பொய்கைக்குளம், வேம்பனூர் பெரியக்குளம் ஆகியவை முழுக்கொள்ளளவை எட்டி தற்போது கலிங்கிப்பகுதியில் உபரி நீர் வெளியேறி வருகிறது. விடத்திலாம்பட்டி, சமுத்திரம், சித்தாநத்தம் ஆறுகளிலும் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. 16 ஆண்டுகளுக்கு பின் பெரியக்குளங்கள் நிரம்பி கலிங்கியில் நீர்வரத்தை இளைஞர்களுக்கு பார்ப்பது முதல் தடவை என்பதால் அனைவரும் கலிங்கியில் வெளியேறும் நீரில் குளித்து, மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இளைஞர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் உபரி நீர் வெளியேறுவதை ஆர்வத்துடன் காண கலிங்கி பகுதியில் குவிந்து வருகின்றனர். இந்த கனமழை ஒருபக்கம், மழை ஆர்வத்தை ஏற்படுத்தினாலும், மறுபுறம் பொதுமக்களை வாட்டிவதைக்கி வருகிறது.  பொய்கைப்பட்டி ஆவிக்குளத்திலிருந்து வெளியேறும் நீர், மணப்பாறை – துவரங்குறிச்சி சாலை சாலக்கரை பொய்கைப்பட்டி பகுதியில் சாலைகளை கடந்து அருகில் உள்ள குடியிருப்புகள், விளைநிலங்களில் புகுந்து சேதம் செய்துள்ளது.

கீழக்கோட்டைக்காரன்பட்டி குடியிருப்பு பகுதிகளிலும், சிதம்பரத்தான்பட்டி குடியிருப்புகளிலும் வெள்ள நீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்கையை புரட்டிப்போட்டுள்ளது.  வெள்ளைப்பாதிப்பு பகுதிகளையும், கலிங்கியில் வெளியேறி வரும் நீர்நிலைகள் குறித்தும் வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக பணியாளர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn