90 ஆண்டுகள் பழமையான திருச்சி கொள்ளிடம் இரும்பு பாலம் உடைப்பு

90 ஆண்டுகள் பழமையான திருச்சி கொள்ளிடம் இரும்பு பாலம் உடைப்பு

திருச்சி திருவானைக்காவல் -  நம்பர் 1 டோல்கேட் இடையை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடந்த 1928ல் கட்டப்பட்ட இரும்பு பாலம் வலுவிழுந்ததால் அதன் அருகிலேயே ரூபாய் 88 கோடி மதிப்பீட்டில் சென்னை நேப்பியார் பாலம் வடிவமைப்புடன் கட்டப்பட்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால்  2016ம் ஆண்டு புதிய பாலம் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு பெய்த கனமழை மற்றும் பெரு வெள்ளம் காரணமாக பழைய இரும்பு பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. உரிய பராமரிப்பு இல்லாததால்  போதும் மற்றொரு தூண் அடித்துச் செல்லப்பட்டது. இதனிடையே பழைய இரும்பு பாலம் முற்றிலும் வலுவிழந்து எந்நேரமும்  இடிந்து விழும் அபாயத்தில் இருந்தது.

கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து குறைந்த பின்னர் பழைய கொள்ளிடம் பாலம் முற்றிலுமாக உடைத்து அப்புறப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்து 3.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது பழைய பாலம் இடிக்கும் பணியானது 2 ஜேசிபி மூலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கான்கிரீட் உடைக்கும் பணி நிறைவு பெற்ற பின்னரே இரும்பு பாலம் அகற்றும் பணியும் நடைபெறும் எனவும் தெரிய வருகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO