திருச்சி திருவானைக்காவலில் தனியார் கல்லூரி பேருந்தும் பள்ளி பேருந்து மோதிய விபத்தில் பால் வியாபாரி உயிரிழப்பு

திருச்சி திருவானைக்காவலில் தனியார் கல்லூரி பேருந்தும் பள்ளி பேருந்து  மோதிய விபத்தில் பால் வியாபாரி உயிரிழப்பு

திருச்சி திருவானைக்காவல் பகுதியில் இருந்து செல்லக்கூடிய தனியார் வேணும், ஸ்ரீரங்கத்தில் இருந்து திருவானைக்கோவில் வந்த தனியார் பாலிடெக்னிக் பேருந்தும் நேருக்கு நேர் கடந்த 28.08.2022ம் தேதி மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது.  திருவானைக்காவலிருந்து ஸ்ரீரங்கம் செல்வதற்கு ரயில்வே மேம்பாலம் ஒன்று உள்ளது. அப்பகுதியில் குறுக்கு சாலையில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

காலை நேரத்தில் பள்ளிக்கு செல்வோர் வேலைக்கு செல்வோர் என போக்குவரத்து நெரிசல் மிகுந்த அப்பகுதியில் இந்த பள்ளி வேணும் பேருந்தும் மோதிக்கொண்டதால் அருகே இருந்த ஆட்டோ விபத்தில் சிக்கி நசுங்கியது. மேலும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மோதி கீழே விழுந்து காயம் அடைந்தனர்.

தனியார் பாலிடெக்னிக் பேருந்தும், வேனும்  மோதிக்கொண்டதில் பத்துக்கு மேற்பட்ட பள்ளி குழந்தைகள், மாணவர்கள் உள்ளிட்டோர் காயமடைந்தனர்.விபத்து குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விபத்தில் சாலையோரம் நின்ற செல்வராஜ் மீதும் பேருந்து மோதியது.ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் வீரேஸ்வரம் கல்மேட்டு தெருவை சேர்ந்த பால் வியாபாரி செல்வராஜ் (வயது 66) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO