வனப்பகுதியில் நாட்டுத்துப்பாக்கியுடன் வேட்டையாட முயன்றவர் கைது

வனப்பகுதியில் நாட்டுத்துப்பாக்கியுடன் வேட்டையாட முயன்றவர் கைது

திருச்சி மாவட்டம், உப்பி லியபுரத்தை அடுத்துள்ள தென்புறநாடு ஊராட்சி பச்சைமலை பகுதியில் மாவட்ட வன அலுவலர் கிருத்திகா உத்தரவின்பேரில் துறையூர் வனச்சரகர் சரவணன், வன வர்கள் ஷ்யாம் சுந்தர், ரஞ்சித் குமார், வனக்காப்பாளர்கள் அரவிந்தன், வீரபாண்டியன், பார்த்திபன், சுசீலா, தனலட்சுமி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தடை செய்யப்பட்ட காப்புகாட்டு பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் திரிவதைக் கண்டு, அவரை மடக்கிபிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர், தென்புறநாடு ஊராட்சி பச்சைமலை கருவங்காடு பகுதியை சேர்ந்த லட்சுமணன் (42) என்பதும், உரிமம் பெறாத நாட்டு துப்பாக்கியுடன் காப்புக் காட்டு பகுதியில் அத்துமீறி நுழைந்து வேட்டையாட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து லட்சுமணனை கைது செய்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision