கூகூர் கல்லணை இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைப்பேன் - அதிமுக வேட்பாளர் தர்மராஜ் வாக்குறுதி
திருச்சி மாவட்டம் , லால்குடி அருகே மணக்கால் ஊராட்சியில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் டி.ஆர். தர்மராஜ் தேர்தல் வாக்கு சேகரிக்கும் போது அப்பகுதி மக்களிடம் பேசிய போது
மக்களின் தேவைகள் அனைத்தையும் அறியக் கூடியவன். என்னை தேர்தலில் வெற்றி பெற வைத்தால் உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றுவேன். இந்த தொகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ள அனைத்து திட்டப் பணிகளும் விரைவில் செய்து முடிப்பேன்.
லால்குடி தொகுதி மக்கள் கல்லணை மற்றும் திருவரப்பூர் பகுதிகளுக்கு சென்று வர கூகூர் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம. அமைக்க நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. என்னை தேர்தலில் வெற்றி பெற செய்தால் உடனடியாக இந்த தரைப்பாலத்தினை அமைத்து தருவேன் என பேசினார்.
இதனைத் தொடர்ந்து மணக்கால் அக்ரஹாரம், கீழத்தெரு, நடராஜபும், கொன்னக்குடி, ஆதிகுடி, ஜங்கமராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் டி.ஆர். தர்மராஜ் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இந்த பிரச்சாரத்தின் போது அதிமுக நிர்வாகிகள்,கூட்டனி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU