ஆடி 18 காவிரி அம்மா மண்டபம் படித்துறையில் கொண்டாட அனுமதி - மாவட்ட ஆட்சியர் பேட்டி
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் செய்தியாளிடம் பேசிய போது... கொள்ளிடம் ஆற்றில் தடுப்பு சுவர் ஆறு மாதத்துக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது. 15 மீட்டர் உடைந்துள்ளது. ஒரு லட்சத்து 28 ஆயிரம் ஒரே வழியாக வந்ததால் உடைந்துள்ளது.
நீரின் வேகத்தால் இரண்டு உயரழுத்து மின் கோபுரங்கள் சாய்ந்து விழுந்து உள்ளது. மேலும் மின்கோபுரங்கள் விழாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மின் கோபுரங்கள் வேறு ஏதும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் மின்வாரிய அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களுக்கு வேறு மின் பாதை வழியாக தடையில்லாமல் மின்வினியோகம் செய்யப்படுகிறது. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை காவிரி ஆற்றங்கரையில் 52 இடங்கள் தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆடி 18 முன்னிட்டு படித்துறைகளில் மற்றும் கரையோரங்களை யாரும் தேவையில்லாமல் வரக்கூடாது.
ஆடி 18 மற்றும் ஆடி அமாவாசைக்கு படித்துறை உள்ள இடங்களில் மட்டும் பாதுகாப்புடன் அனுமதிக்கப்படுவார்கள் மற்ற இடங்களில் அனுமதி கிடையாது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision