திருச்சியில் பழைய சைக்கிள்களை வைத்து ஓய்வறை - மாணவர்கள் அசத்தல்
திருவெறும்பூர் அருகே துவாக்குடி உழவர் சந்தை அருகே வியாபாரிகள் இளைப்பாற என் ஐ டி மாணவர்கள் பழைய சைக்கிள்களை பயன்படுத்தி ஓய்வு அறை உருவாக்கியதை கல்லூரி இயக்குனர் ஜி.அகிலா திறந்து வைத்தார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியில் என்ஐடி கல்லூரி உள்ளது.
இங்கு படிக்கும் மாணவர்கள் சைக்கிளில் முதன்மை வாயிலில் இருந்து வகுப்புகளுக்கு செல்வார்கள் அவர்கள் படிப்பு முடிந்ததும் சைக்கிள்களை விற்பனை செய்வார்கள் சிலர் கல்லூரியிலேயே விட்டுவிட்டு செல்வர். இந்நிலையில் கல்லூரி கட்டிடக்கலைத் துறை மாணவர்கள் சுஜன் லாசி தலைமையில் 70 மாணவர்கள் ஒன்று கூடி ஏ என் டி சி இன்டர்நேஷனல் என்ற நாசா நடத்தும் 66 வது ஆண்டு போட்டியில் சுழற்சி என்ற தலைப்பில் கலந்து கொண்டனர்.
அம் மாணவர்கள் 45 நாட்கள் முயன்று என் ஐ டி மாணவர்கள் கைவிட்ட நூறு சைக்கிள்களின் வெயில்கள் டியூபுகள் பிரேம்கள் உள்ளிட்ட உதிரிபாகளை கொண்டு ஓய்வறை உருவாக்கினர். இந்த ஓய்வறையானது துவாக்குடி அருகே பிலக் தியேட்டர் பகுதியில் இயங்கி வரும் உழவர் சந்தை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது கல்லூரி இயக்குனர் முனைவர் ஜி அகிலா திறந்து வைத்தார் இதில் வேளாண் துறை துணை இயக்குனர் சரவணன் உள்ளிட்ட வேளாண் அலுவலர்கள் கலந்து கொண்டனர் ஓய்வறையின் முகப்பில் சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை என்ற திருக்குறளுடன் வரவேற்பு ஓவியம் மாணவர்கள் வரைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.