நடிகர் விஜய் திருச்சியில் போட்டி? பொதுக்குழுவில் முடிவு எடுப்போம் - வெள்ளாளர் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் பேட்டி.

நடிகர் விஜய் திருச்சியில் போட்டி? பொதுக்குழுவில் முடிவு எடுப்போம் - வெள்ளாளர் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் பேட்டி.

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சி கொடியை கடந்த 22 ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் கொடி மீது பல்வேறு சர்ச்சைகளும் விமர்சனங்களும் எழுந்து வரும் நிலையில், வெள்ளாளர் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் ஹரிஹருன் பிள்ளை தனது சமூகம் சார்ந்த நிர்வாகிகளுடன் திருச்சி பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

அப்போது அவர் பேசுகையில்... தமிழக வெற்றி கழகத்தின் கொடியும் வெள்ளாளர் சமூகத்தின் கொடியின் நிறமும் ஒரே மாதிரி உள்ளதால் சர்ச்சைகளும் விமர்சனங்களும் தொடர்ந்து இருந்துள்ளது. வெள்ளாளர் சமுதாயத்திற்கும் எங்கள் சமுதாய அமைப்பிற்கும் விஜய்க்கும் எந்தெந்த சம்மந்தமும் கிடையாது. வெள்ளாளர் சமுதாயத்தைச் சார்ந்தவர் அவர்கள் குடும்பத்தில் இருக்கிறாங்க அதனால அவரை நாங்கள் பெருமைப்படுகிறோம் அவர் ஒரு மிகப்பெரிய உச்ச நடிகர் அவர் பொதுவானவர் அத்தனை சமுதாயத்திற்கும் ஒரு பொதுவானவர்.

அத்தனை மதங்களையும் கடந்து அத்தனை ஜாதிகளையும் கடந்து அவர் ஒரு பொதுவான ஆளா இருக்கறதுனால தான் இன்னைக்கு ஒரு மிகப்பெரிய ஒரு நடிகர் உச்ச நடிகராகவும் இருக்கிறார். அதை தொடர்ந்து அவர் கட்சியை ஆரம்பித்திருக்கிறார் எங்கள் சமுதாயத்தை சார்ந்த ஒருத்தர் வந்து கட்சி ஆரம்பித்திருக்கிறார். கொஞ்சம் நடிகராக இருக்கிறது என்கிறது எங்களுக்கு ஒரு பெருமை அவரை வரவேற்கும் கட்சி ஆரம்பிச்சிருக்கிறார் என்கிற காரணத்தினாலே அவரை வரவேற்கிறோமே தவிர, மத்தபடி பொது வழித்தடங்கள் வருகிற மாதிரி எங்களுக்கும் அவங்களுக்கும் எந்தவித மோதல்களோ இல்ல. எங்கள் கொடிய அப்படியே பண்ணி போட்டு இருக்காங்க என்பது பொய்...

அவருடைய கட்சி மிகப்பெரிய வெற்றி அடைவதற்கு எங்கள் சமூகம் சார்பாக வாழ்த்துகிறோம். எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் குடும்பத்தில் மற்றும் அவருடன் நிறைய பேர் இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் அவருக்கான ஆதரவை பொதுக்குழுவைக் கூட்டி அதில் தெரிவிப்போம். திருச்சியில் நின்று அவர் தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயம் வரவேற்போம். விஜய் கட்சி ஆரம்பித்தது தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் தான் இது போன்ற சர்ச்சைகள் கிளப்பப்படுகிறது .இவ்வாறு ஆர்.வி.ஹரிஹரூன்பிள்ளை கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision