திருச்சியிலிருந்து கொழும்பு வழியாக துபாய்க்கு செல்ல கூடுதல் சலுகை

திருச்சியில் இருந்து துபாய் செல்வது தற்பொழுது மேலும் எளிதாகிறது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தற்பொழுது கொழும்புவில் இருந்து தினசரி இரண்டு விமானங்களை துபாய்க்கு இயக்குகிறது. எனவே திருச்சியில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் UL 132/134 எந்த விமானத்தில் சென்றாலும் கொழும்புவில் உடனடியாக துபாய் இணைப்பு விமான சேவை கிடைக்கிறது.
உலகின் மிகச்சிறந்த எக்கனாமி வகுப்பு சேவைகளில் ஒன்றான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் திருச்சியில் இருந்து கொழும்பு வழியாக துபாய்க்கு 30+7 கிலோ பயண உடமை சிற்றுண்டி மற்றும் உணவு வகைகள் மற்றும் பல சலுகைகளுடன் அனுபவித்து மகிழுங்கள்.