திருச்சி ரயில்வே சந்திப்பில் 2.500 கிலோ கஞ்சா பறிமுதல்

திருச்சி ரயில்வே சந்திப்பில் 2.500 கிலோ கஞ்சா பறிமுதல்

திருச்சி ரயில்வே சந்திப்பில் 2.500 கிலோ கஞ்சா பறிமுதல்.திருச்சிராப்பள்ளி ரயில்வே சந்திப்பில், ரயில்வே பாதுகாப்பு படையைச் சேர்ந்த, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர்.

திரு.ஜிஎம் ஈஸ்வர ராவ், முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர், தெற்கு ரயில்வே அவர்களின் உத்தரவின் பேரில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் Dr. அபிஷேக் மற்றும் உதவி ஆணையர் திரு. பிரமோத் நாயர் ஆகியோர்களது மேற்பார்வையில் திருச்சி RPF இன்ஸ்பெக்டர் திரு. K. P. செபாஸ்டியன் மற்றும் திரு.L .பாஸ்கர், DSP/NIB/CID/Trichy அவர்கள் தலைமையில் இன்று 25.03.2025 சோதனை நடத்தினர். அப்பொழுது திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை மூன்றாவது நடைமேடையில் நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியில், கைவிடப்பட்ட 2 பாலிதீன் பையைக் கண்டறிந்தனர்.

பின்னர் பையை ஆய்வு செய்தபோது, ​​அதில் அரைக்கிலோ எடையுள்ள ரூ.10,000/- மதிப்புள்ள ஒரு கஞ்சா பொட்டலமும், 2கிலோ எடைகொண்ட ரூ.40,000/-மதிப்புள்ள ஒரு கஞ்சா பொட்டலமும் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision