திருச்சியில் 57 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது

திருச்சியில் 57 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ரவுடிகளின் நடவடிக்கைகளை முற்றிலுமாக தடுக்கும் பொருட்டு திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு செ.செல்வ நாகரத்தினம் அவர்கள் உத்தரவின் பெயரில் தனிப்படைகள் உருவாக்கப்பட்டு

கடந்த ஒரு வார காலமாக சிறப்பு தீவிர வேட்டை மேற்கொண்டத்தின் பெயரில் முதற்கட்டமாக சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் குற்ற செயல்களை கண்டறிந்து திருச்சி மாவட்டத்தில் 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 57 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

 மேலும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது தேவைப்படும் பட்சத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குற்ற செயல்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க சிறப்பு தீவிர வேட்டை(Special Drive) மற்றும் சிறப்பு சட்ட ஒழுங்கு பராமரிப்பு நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

மேலும் மேற்படி சரித்திர பதிவேடு குற்றவாளிகள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பட்சத்தில் பொதுமக்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண் 8939146100-தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது தகவல் கொடுப்போரின் பெயர் விலாசம் ரகசியம் காக்கப்படும்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision