தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை

தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை

திருச்சி மாவட்டத்திலுள்ள திருச்சி, மணிகண்டம் மற்றும் புள்ளம்பாடி(மகளிர்) அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்திட www.skilltraining.tn.gov.in என்ற இணையதள மூலம் (10.05.2024) முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் மேற்காணும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நேரில் சென்றும் விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கலாம்.

தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆகஸ்டு 2024 முதல் தொடங்கும் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற்பிரிவுகள், இவற்றிற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் (Prospectus) தரப்பட்டுள்ளன.

மாணவர்கள் இணையதளத்தில் கொடுத்துள்ள அறிவுரைகளை கவனமாக படித்து புரிந்து கொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இணையதளத்தில் சமர்பிக்க வேண்டும்.Debit card/ Credit card/ Net Banking/ Gpay வாயிலாக செலுத்தலாம். மதிப்பெண் அடிப்படையில் நடைபெறவிருக்கும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பின்னர் இதே இணையதளத்தில் வெளியிடப்படும். அதன்படி மாணவர்கள் மாநில அளவிலான இணையதள கலந்தாய்வில் கலந்து கொண்டு தாங்கள் சேர விரும்பும் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தொழிற்பிரிவை தேர்வு செய்து கொள்ளலாம்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி பெறும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள், சீருடை, பாடநூல், வரைபடக் கருவி, காலணி, விலையில்லா பேருந்து அட்டை, மாதாந்திர உதவித்தொகை ரூ.750/- மற்றும் 10 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற பெண் மாணவிகளுக்கு புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாதாந்தோறும் ரூ.1000/- உதவித்தொகை வழங்கப்படும். 

மேலும், பயிற்சி முடித்த பின் Campus Interview மூலம் 100% வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி வழங்கப்படும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.06.2024. மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : திருச்சி - 8667204376, மணிகண்டம் 9042411348, புள்ளம்பாடி - 9443997026 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision