அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பில் உறுப்பினர் சேர்க்கை தொடக்கம்

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பில் உறுப்பினர் சேர்க்கை தொடக்கம்

ஏபிவிபி-யின் தேசிய செயலாளர் முத்துராமலிங்கம் மற்றும் தென் தமிழக மாநில செயலாளர் சுசிலா மற்றும் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஸ்வின் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர் இந்த அறிக்கையில்.... அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பு நாடு முழுவதும் மாணவர்களிடையே அறிவு, ஒழுக்கம், ஒற்றுமை வளர பல ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வருகிறது.

33 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய மாணவர் அமைப்பு ஏபிவிபி ஆகும். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும், நமது பாரத தேசத்தின் வளர்ச்சிக்காகவும், தலைசிறந்த மாணவர் தலைவர்களை உருவாக்கும் பணிகளை 1949 முதல் ஏபிவிபி செய்து வருகிறது. மாணவர்களிடையே கல்வி வளர்ச்சி ஆளுமைத்திறன், தலைமைப்பண்பு, தேசபக்தி ஆகியவற்றை விளர்க்கும் பயிற்சிப்பட்டறை ஏபிவிபி ஆகும்.

இந்த ஆண்டு கொரோனா கால விதிமுறைகளைப் பின்பற்றி நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென்தமிழகத்தில் உறுப்பினர் சேர்க்கையானது நேற்று 11.10.2021 முதல் தென் தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதில் பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்க கூடிய பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் உறுப்பினராக இணைய ஏபிவிபி அன்போடு அழைக்கிறது.

நாடு முழுவதும் ஒரு கோடி மாணவர்களையும், ஆசிரியர்களையும், தமிழகத்தில் ஒரு லட்சம் மாணவர்கள் உறுப்பினராக சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தென் தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஏபிவிபி-இல் இணைவதற்கு தொடர்பு எண்கள் வெளியிடப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏபிவிபி தங்களை இணைத்துக் கொண்டு தாங்களும் வளர்ச்சி அடைந்து பாரத தேச வளர்ச்சிக்கும் தங்களது பங்களிப்பை வழங்குமாறு ஏபிவிபி அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் ஏபிவிபி உறுப்பினர் சேர்க்கை குறித்த விவரங்கள் சந்தேகங்களுக்கு 9363281119 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn