விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சி ஆர்ப்பாட்டம்!!
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருச்சி பாலக்கரை பகுதியில் அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறி மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாலக்கரை பகுதியில் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS