திருச்சியில் துணை ஆட்சியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை

திருச்சியில் துணை ஆட்சியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை

2011 ஆம் ஆண்டில் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் ஆக பணிபுரிந்தவர் பவானி. பின்னர் பதவி உயர்வில் மன்னார்குடி துணை ஆட்சியராக தற்போது பணியாற்றி வருகிறார். 2011ல் இருந்து 2021 வரை உள்ள காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தற்போது மன்னார்குடி துணை ஆட்சியராக இருக்கும் பவானி மீது திருச்சி ஊழல் கண்காணிப்பு தடுப்பு பிரிவவினர் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

இதனை அடுத்து இன்று திருச்சி திருவானைக்காவல் நெல்சன் ரோட்டில் இருக்கும் சாரதிநகர் வீட்டிலும் மண்ணச்சநல்லூரிலுள்ள எஸ் வி ஆர் ஸ்கூல் மற்றும் வாளாடியிலுள்ள பெட்ரோல் பங்க் உள்ளிட்ட 3 இடங்களில் திருச்சி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மண்ணச்சநல்லூர் வருவாய் வட்டாட்சியராக பணியாற்றியவர் பவானி. தற்போது திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுக்காவில் உள்ள வருவாய் நீதிமன்றம் தனித்துணை ஆட்சியராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn