முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான "மாதாந்திர ஓய்வூதியம்" பெற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான "மாதாந்திர ஓய்வூதியம்" பெற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

விளையாட்டுத்துறையில் குறிப்பிடத் தக்க வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.6000/- வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் மட்டுமே வரவேற்கப்படுகிறது. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் (30.09.2024) அன்று ஆகும். மாலை 5:00 மணி

தகுதிகள்

1.குறைந்தபட்ச தகுதி : சர்வதேச / தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் / இரண்டாமிடம் / மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

சர்வதேச / தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தின் சார்பாக பங்கேற்பு

2. தகுதியான விளையாட்டுப் போட்டிகள் : ஒன்றிய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கிடையேயான போட்டிகள். 

அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள் இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு

சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சர்வதேச / தேசிய அளவிலான போட்டிகள். விளையாட்டுப் ஒன்றிய அரசின் விளையாட்டு அமைச்சகம் / இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச / தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள்.

3. (31.08.2024) தேதியன்று 58 வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும்.

4. விண்ணப்பதாரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.

5. விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6000/- க்குள் இருத்தல் வேண்டும்.

6. மத்திய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் / மாநில அரசின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறத் தகுதி இல்லை.

7. முதியோருக்கான (Veteran / Masters Sports Meet) விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெற தகுதியில்லை.

மேலும், முக்கிய விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சிராப்பள்ளி (தொலைபேசி எண் : 0431-2420685) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision