மணப்பாறை அருகே கோவில் திருவிழாவில் சிறுவர் முதல் பெரியவர் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்

மணப்பாறை அருகே கோவில் திருவிழாவில் சிறுவர் முதல் பெரியவர் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்

மணப்பாறை அருகே கோவில் திருவிழாவில் சிறுவர் முதல் பெரியவர் வரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்.திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மருங்காபுரியில் ஸ்ரீபகவதி அம்மன் கோவில் உள்ளது.

இக்கோவில் சுமார் ஐநூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும். மணப்பாறை பகுதி மக்களிடையே மருங்காபுரி பகவதி அம்மன்கோவில் முக்கியத்துவம் பெற்றதாக விளங்கிவருகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் முக்கியத்துவம் வாய்ந்த பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 

அதேபோல் இந்த ஆண்டும் திருவிழாவானது கடந்து 27 மண் தேதி மருங்காபுரி அருகே உள்ள மொட்டமலை போடிகிரிநாதர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு காப்புகட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு தரப்பினரின் மண்டகப்படி நிகழ்சிகள் தினந்தோறும் நடந்து வந்தது. முக்கிய விழாவான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வரிசையாக வந்து பூ குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான சிறுவர்கள், சிறுமிகள் மற்றும் பெண்களும் குழந்தைகளுடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கனக்கான பக்தர்கள் தீமிதி திருவிழாவில் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision