பல்வேறு கோரிக்கைகளுக்குப் பிறகு செவிசாய்த்து உள்ள திருவானைக்காவல் கோயில் நிர்வாகம்

பல்வேறு கோரிக்கைகளுக்குப் பிறகு செவிசாய்த்து உள்ள திருவானைக்காவல் கோயில் நிர்வாகம்

பல்வேறு கோரிக்கைகளுக்குப் பிறகு செவிசாய்த்து உள்ள திருவானைக்காவல் கோயில் நிர்வாகம். திருவானைக்கா கோயில் மேற்கு கோபுரத்திற்குள் பக்தர்கள் நுழைய முடியாமல் பரிதவித்து வந்தனர் சிறிய அளவு நுழைவாயிலுக்குள் கார்கள் வேன்கள்

 ஆட்டோக்கள் இருபுறமும் சென்று வந்து கொண்டிருந்தன இதனால் பக்தர்கள் உள்ளே நுழைய முடியாமல் இருந்து வந்தனர் இது குறித்து பலமுறை பத்திரிக்கை வாயிலாகவும் நேரடியாகவும் திருவானைக்கா கோயில் நிர்வாகத்திடம் முறையிட்டு இருந்தோம் ஆனால் இதை கண்டு கொள்ளாமல் கோயில்

 நிர்வாகம் செயல்பட்டது பலமுறை பக்தர்கள் கால்களில் கார் சக்கரங்கள் பதம் பார்த்தன இது குறித்தும் தெரிவித்தும் கோயில் நிர்வாகம் தடுப்பு கட்டைகள் அமைக்காமல் இருந்து வந்தன இந்நிலையில் இன்று திங்கட்கிழமை மாலை மேற்கு கோபுரத்தில் இருபுறமும் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு உள்ளது இதை பார்த்த பக்தர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர் மேலும் இந்த தடுப்பு கட்டைகள் கோயில் விழா காணும் போது எடுக்கும் வண்ணம் பதிக்கப்பட்டு உள்ளது பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தடுப்பு

கட்டைகள் அமைத்த கோயில் நிர்வாகத்திற்கும் மாநகராட்சிக்கும் பக்தர்கள் பலமுறை நன்றி தெரிவித்தனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision