புத்தக வாசிப்பை வலியுறுத்தி லடாக் வரை சைக்கிளில் விழிப்புணர்வு பயணம்

புத்தக வாசிப்பை வலியுறுத்தி லடாக் வரை சைக்கிளில் விழிப்புணர்வு பயணம்

புத்தக வாசிப்பு ஒருவனின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை உண்டாக்கும் என்பதற்கு நானே சான்று. புத்தக வாசிப்பை வலியுறுத்தி கரூரில் இருந்து காஷ்மீர் மாநிலம் லடாக் வரை சைக்கிளில் பயணம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்த என்னுடைய பயணத்தை தொடங்கி உள்ளார் யோகேஸ்வரன்.

புத்தக வாசிப்பு குறித்தும் பயணத்தை குறித்து கேட்டபொழுது புன்னையோடும் புத்துணர்வோடும் பேசத்தொடங்கினார். நம் வாழ்வை முழுமையாக வாழ்ந்ததற்கு அர்த்தம் வாழ்க்கையில் ஒரு பத்தாயிரம் புத்தகங்களை படித்திருக்க வேண்டும் அல்லது பத்தாயிரம் மையில்கள்  பயணம் செய்திருக்க வேண்டும் என்பது இறையன்பின் வரிகள்.

இந்த வரிகள் புத்தக வாசிப்பின் மீதான ஆர்வத்தையும் பயணத்தை பற்றிய புரிதலையும்  தந்தது. கல்லூரிப் படிப்பைத் தொடரவில்லை எனினும் புத்தகத்தின் மீதான காதலால் புத்தக வாசிப்பைத் தொடர ஆரம்பிததேன். முதலில் ஆன்மிகம் குறித்த புத்தகங்களை படித்தேன். தொடர்ந்து வாழ்கை, இலக்கியம், தத்துவம், பயணம், இயற்கை, புரட்சி சார்ந்த பல  வகையான நூல்களையும் படிக்க தொடங்கினேன். புத்தக படிப்பு என்பது நம்மை நாமே மேம்படுத்திக் கொள்வதற்கு மிகப்பெரிய கருவி. "புத்தகம் ஒரு சிறந்த நண்பன்"

புத்தகங்கள் நமக்கு புதிய புதிய வழிகளையும் அனுபவங்களையும் தரும் அதேபோன்றுதான் பயணங்கள் இவ்விரண்டும் ஒருவன் வாழ்வில் இருக்குமாயின் வாழ்க்கை முழுமை அடைந்ததாக கூறுவார்கள். எனவே இந்த பயணத்தின் மூலமே புத்தகங்கள் குறித்த விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும் அதே சமயம் நாம் சுற்றித் திரியும் இவ்வுலகத்தில் எத்தனை எத்தனை மனிதர்கள் புதுமையாக இருக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்வதற்கு பயணங்களை விட சிறந்த வழி எதுவும் இல்லை.


"இலக்கற்ற பயணத்தில்  மகிழ்ச்சியும் அதிசயங்களும் நிறைந்த கொண்டே இருக்கும் என்பது ஓசோவின் வரிகள்" எனவே  இந்த பயணத்தின் வழியே பலவகைப்பட்ட மனிதர்களையும் மக்களின் வாழ்க்கை முறைகளையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்று தொடங்கியுள்ளேன். இறையன்பின் வரிகளைப் போல 12 ஆயிரம் மைல்கள் ஒரு 11 மாநிலங்களில் சுற்றி கடந்து வரலாம் என்று நேற்றைய தினம் என் பயணத்தை தொடங்கி உள்ளேன். புத்தகங்களின் நான் பார்த்து ரசித்த மனிதர்களை சந்திக்க போகிறேன் என்ற ஆர்வத்தோடு என்னுடைய பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்கிறார் யோகேஷ்வரன்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn