தேர்தல் முடிந்தும் எடுக்கப்படாத வாக்கு பெட்டிகள் - கடும் அவதிக்கு உள்ளான பணியாளர்கள்

தேர்தல் முடிந்தும் எடுக்கப்படாத வாக்கு பெட்டிகள் - கடும் அவதிக்கு உள்ளான பணியாளர்கள்

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு நேற்றுவாக்கு பதிவு நடந்தது. அதில் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் 296 வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பொருட்களுடன் தேர்தல் பணியாளர்கள் கடந்த 18ஆம் தேதி மதியம் முதல் வாக்குச்சாவடிக்கு அனுப்பப்பட்டனர்.

நேற்று 19ஆம் தேதி காலை 07:00 மணி முதல் மாலை 06:00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் சோழமாதேவி உட்பட சில கிராமங்களில் ஆறு மணிக்கு டோக்கன் வழங்கப்பட்டு அதன் பின்னர் இரவு 07:00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து தேர்தல் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட வேட்பாளர் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப் பெட்டிகளை சீல் வைத்து பெட்டியில் வைத்தனர். அப்படி சீல் வைத்த பெட்டிகள் தேர்தல் மண்டல அலுவலர்கள் நேரில் வந்து சரிபார்த்து எடுத்துச் செல்வது வழக்கம். அதன் பின்னரே தேர்தலுக்கு வந்த பணியாளர்கள் வீட்டுக்கு செல்ல முடியும். திருவெறும்பூர் தொகுதியில் வாழவந்தான் கோட்டை பகுதியில் அதிகாலை 01:50 மணி வரை வாக்குப்பெட்டிகள் எடுக்கப்பட்டதால், அங்கு அதுவரை பணியில் இருந்த பெண்கள் உள்பட தேர்தல் பணியாளர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

அடுத்து திருவெறும்பூர் தென்பகுதியில் பழங்கனான்குடி, பூலாங்குடி, ஓ எப் டி, அரவக்குறிச்சி பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் இருந்து இன்று 20ம் தேதி காலை 09:00 மணி வரை வாக்குப் பெட்டிகள் எடுக்கப்படாததால் அங்கு பணியில் இருந்த தேர்தல் பணியாளர்கள் பல்வேறு சிரமம் அடைந்தனர். பின்னர் படிப்படியாக வாக்குப்பெட்டிகள் சேகரிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision