அரியாறு வாய்கால் கரை உடைப்பு- மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

அரியாறு வாய்கால் கரை உடைப்பு- மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

திருச்சிராப்பள்ளி பிராட்டியூரில், அரியார் ஆற்றில் உள்ள பிராட்டியூர் அனைக்கட்டில் இருந்து பிராட்டிடயூர் ஏரிக்கு செல்லும் வழங்கு வாய்காலில் இருந்து வழிந்தோடிய நீரானது பர்மா காலனி அருகே அரியாறு வாய்க்காலில் சுமார் 10 மீட்டர் அகலத்திற்கு இன்று (17.8.22) உடைப்பு ஏற்படுத்தி உள்ளது.

இதனையறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், உடைப்பு ஏற்பட்ட இடத்தினையும், தண்ணீர் வழிந்தோடிய பகுதியினையும் பார்வையிட்டு உடைப்பினை உடனடியாகச் சரிசெய்திட நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்வின் போது நீர்வளத்துறை செயற்பொறியாளர் நித்தியானந்தம், உதவி செயற்பொறியாளர் ஜோதி, ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் குணசேகரன் உடனிருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO