ஈ.வெ.ரா கல்லூரி பேராசிரியர் மீது பாலியல் புகார் - விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

ஈ.வெ.ரா கல்லூரி பேராசிரியர் மீது பாலியல் புகார் - விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத்துறை பேராசிரியர் மீது பாலியல் வன்கொடுமை புகார் - விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கல்லூரி கல்வி இயக்குனர் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்திட முதல்வர் வேண்டுகோள்!

பல வருடங்களாக கல்லூரியின் உள்ளே புகைந்து கொண்டிருந்த குற்றச்சாட்டு இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பேராசிரியர் தான் உயர் பதவிகளை எட்டக்கூடாது என்பதற்க்காக  குற்றச்சாட்டை வைப்பதாக குறிப்பிடுகிறார். முதல்வர் தன்னையும் அவர் அப்படித்தான் பேசுகிறார் என்று ஜாதி ரீதியாக பேசி தன் மீது குற்றச்சாட்டை முன் வைக்கிறார் என்கிறர். எது உண்மை ஆனால் மாணவிகள் ஏராளமானோர் புகார் கடிதங்களை எழுதி கையெழுத்துடன் புகார் மனுவில் கொடுத்துள்ளனர். எது உண்மை இந்த பாலியல் குற்றச்சாட்டில் முன்பு நடந்தவைகளை தற்போது பார்ப்போம்....

திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள ஈ.வெ.ரா பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது.இதில் ஆங்கிலத் துறையில் எம் ஏ படித்த மாணவி ஆங்கிலத் துறையின் தலைவரும், பேராசிரியருமான ஜெயக்குமார் என்பவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு துன்புறுத்தல்கள் செய்ததாக குற்றச்சாட்டை  முன் வைத்துள்ளார்.

இந்நிலையில் மாணவி திருச்சி அரசு மருத்துவமனையில் மனநல சிகிச்சை பெற்று வரும் சூழலில், முதலமைச்சரின் தனி பிரிவிற்கு இது தொடர்பாக புகார் ஒன்றை கடந்த ஜூன் மாதம் அனுப்பியுள்ளார். புகாரைத் தொடர்ந்து முதல்வரின் தனிப் பிரிவிலிருந்து இப்புகார் மீது உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென கல்லூரி முதல்வருக்கு கடிதம் வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் இதற்கான குழு அமைத்து விசாரணை நடத்தியதாகவும் விசாரணையில் ஆங்கிலத்துறை பேராசிரியர் ஜெயக்குமார் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறி, கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு விசாரணை அறிக்கையை கடந்த 03.08.2022ம் தேதி தாக்கல் செய்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் பேராசிரியர் ஜெயக்குமார் மீது ஸ்டெல்லா என்ற பெயரில் புகார் கடிதம் வந்ததாகவும், ஆனால் ஸ்டெல்லா என்கிற பெயரில் மாணவிகள் யாரும் அத்துறையில் பயிலவில்லை என்றும்,தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் ஆங்கில துறையில் எம் ஏ படித்த மாணவி ஒருவர், பேராசிரியர் ஜெயக்குமார் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாகவும், இது தொடர்பாக எஸ்சி, ஒசி, பிசி பேராசிரியர் அடங்கிய குழு விசாரணை மேற்கொண்டதில் பேராசிரியர் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பது தெரிய வந்ததாகவும், குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு கடந்த  3 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து கல்லூரியின் பெயரையும் அரசின் பெயரையும் காக்கும் வகையில் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியரை போக்சோ சட்டத்தில் கைது செய்யாவிட்டாலும், பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர் எப்பொழுதும் போல் கல்லூரிக்கு வந்து மாணவ மாணவிகளுக்கு பாடம் எடுத்து வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார். பேராசிரியர் ஜெயக்குமாரிடம் நான் ஒரு தலித் என்பதால் இதுபோன்ற குற்றச்சாட்டை தன் மீது சுமத்துவதாகவும், அனுபவம் வாய்ந்த தனக்கு பணி உயர்வு கிடைக்க உள்ள நிலையில் அது கிடைக்காமல் இருப்பதற்காக இதுபோன்ற புகார்கள் தெரிவிக்கப்படுவதாகவும், புகார் தெரிவித்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக சக மாணவிகளிடம் தெரிவித்து வந்ததாகவும், இதுகுறித்து மாணவியின் பெற்றோரிடம் மனநல ஆலோசனை வழங்குமாறு தெரிவித்த நிலையில், தற்போது தன் மீது இத்தகைய குற்றச்சாட்டு சுமத்தப்படுவதாகவும், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை முற்றிலும் மறுப்பதாக தெரிவித்த பேராசிரியர், உரிய விசாரணையை மேற்கொண்டு தன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்.

ஒரு பக்கம் மாணவி பாலியல் குற்றச்சாட்டு தெரிவிப்பதும், மற்றொரு பக்கம் காழ்ப்புணர்ச்சி காரணமாக இது போன்ற குற்றச்சாட்டுகள் தன்மீது வைக்கப்படுவதாக பேராசிரியர் தெரிவித்து வரும் நிலையில், கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கல்லூரி கல்வி இயக்குனர் தலையிட்டு உரிய விசாரணை நடத்தினால் மட்டுமே குற்றச்சாட்டின் உண்மைத் தன்மை குறித்தது தெரியும்.

சாதியை ஒழிக்க போராடிய பெரியார் பெயரிலுள்ள அரசு கல்லூரியில் பேராசிரியர் மாணவியரிடம் பாலியல் துன்பறுத்தலில் ஈடுபட்டதாக புகாரை  மாணவிகளே கடிதம் எழுதி கையெழுத்துட்டு முதல்வருக்கு அனுப்பி உள்ளனர். தற்பொழுது விசாரணை நடத்தப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. பல வருடங்களாக இவரை பற்றி புகார் வரும் போதெல்லாம் பேராசிரியர் தன்னை ஜாதி ரீதியாக பேசி தன் உயர்பதவியை தடுப்பதாக கூறுகிறார். மாறி மாறி ஜாதி புகார்கள் வந்தாலும் மாணவிகளிடம் விசாரணை நடத்தி தான் இதற்கான முழு ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார். உண்மை வெளிச்சத்துக்கு வந்து விட்டது . தமிழக அரசு நடவடிக்கை எப்போது என மாணவிகள் ஒவ்வொரு நிமிடமும் காத்துக் கொண்டு உள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO