முடிதிருத்தும் தொழிலாளர்கள் அரசு நிவாரண உதவி கேட்டு அமைச்சரிடம் மனு

முடிதிருத்தும் தொழிலாளர்கள் அரசு நிவாரண உதவி கேட்டு அமைச்சரிடம் மனு


 தமிழ்நாடு மருத்துவர் நலச்சங்க திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் தர்மலிங்கம்,தலைவர் செல்வராஜ் பொருளாளர் முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது கொரானா தொற்றால்  தமிழக அரசு ஊரடங்கு காலத்தில் ஏப்ரல் மாதத்திலிருந்து    முடிதிருத்தும் நிலையங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. கடைகள் திறக்க இயாலத நிலையால்  தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து நிற்கிறார்கள்.


 கடை மற்றும் வீடுகளுக்கு வாடகை கட்ட முடியாமல் மின் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.இதற்கிடையே மீண்டும் தற்போது பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தளர்விலும் சலூன்கள் திறப்பது பற்றி அறிவிக்கப்படவில்லை இதனால் முடிதிருத்தும் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.
 ஆகவே தொழிலாளர்களுக்கு சிறப்பு நிவாரணம்  வழங்கி காப்பாற்ற தமிழக அரசிடம் பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

 இந்த மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து இன்றைய தினம்   தமிழ்நாடு மருத்துவ நலச்சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர் சங்கம்  திருச்சி மாநகர இளைஞரணி சார்பாக முதல்வர் அவர்களுக்கு கடிதம்  எழுதியுள்ளனர்.

இச்சங்கத்தின் திருச்சி மாநகர இளைஞரணி அமைப்பாளர் சுப்பிரமணியன்  கூறுகையில்,
  முடித்திருத்தும் தொழிலாளர்களுக்கு சிறப்பு நிவாரணம் வழங்கி காப்பாற்ற வேண்டும் அல்லது  பாதுகாப்பு வழிகாட்டுதலின்படி சலூன் கடைகள் திறந்து தொழில் செய்திட அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம்.

இந்த ஊரடங்கு காலகட்டத்தில் அரசின் விதிகளை பின்பற்றி நாங்கள் கடைகளை திறக்காமல் இருந்தாலும் கடை வாடகை மற்றும் மின்சாரக் கட்டணங்கள் செலுத்த வேண்டிய சூழலில்  கட்டாயமாகின்றது. எனவே எங்களுக்கு ஏதேனும் சிறப்பு நிவாரணம் வழங்க வேண்டும்.திருச்சியில் 5000  முடி திருத்தும் கடைகள் செயல்பட்டு வருகிறது.ஊரடங்கால் அனைவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.எனவே கடைகள் தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம் என்கிறார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC