மக்கும் குப்பை மக்காத குப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய வேளாண் கல்லூரி மாணவிகள்

மக்கும் குப்பை மக்காத குப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய  வேளாண் கல்லூரி மாணவிகள்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே எசனைக்கோரையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கிராம வேளாண் பணி அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி மாணவிகள் மக்கும் குப்பைகள் மக்கா குப்பைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே எசனைக்கோரையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வில் இதில் மக்கா குப்பைகள் மறு சுழற்சிக்கு உட்படுத்தபடுகிறது. குப்பையை வகைப் பிரித்து அனுப்புவதன் மூலம் குப்பை கிடங்கிற்கு நாள்தோறும் அனுப்பப்படும் குப்பையின் அளவு குறையும். நகராட்சியின் சுகாதார மேம்படும். வேளாண் கல்லூரி மாணவிகள் மக்கும் குப்பை மக்காத குப்பை குறித்து பள்ளி மாணவர்களுக்கு எடுத்துக்காட்டுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமாவளவன் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் வகித்தனர். பள்ளி மாணவர்கள் குப்பைகள் மேலாண்மை முறைகளையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் வேளாண் கல்லூரி மாணவிகள் எடுத்துரைத்தனர். பிளாஸ்டிக் போன்ற மக்காத குப்பைகளை சாலையோரம் செல்கின்ற உயிரினங்கள் எடுத்துக்காட்டாக மாடு, ஆடு குரங்குகள் போன்ற விலங்குகளுக்கு ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வுடன் எடுத்துரைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் வேளாண் கல்லூரி மாணவிகள் ரா.பிரியங்கா, சு.ரிஷிகா, இ.பிரதீபா, பி.பிரபா, மா.ராணி, பா.பிரீத்தி, செ.பூர்ணிமா, ம. ரூபி பிரசன்னா ஆகியோர் கொண்ட குழு மக்கும் குப்பை மக்காத குப்பை பற்றி விழிப்புணர்வு குறித்து பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பயன்பெறும் எடுத்துரைத்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision