திருச்சி விஷன் அறக்கட்டளை சார்பில் ரம்ஜான் சிறப்பு பரிசு தொகுப்பு 

திருச்சி விஷன் அறக்கட்டளை சார்பில் ரம்ஜான் சிறப்பு பரிசு தொகுப்பு 

திருச்சி விஷன் அறக்கட்டளை சார்பாக ரம்ஜான் திருநாள் முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு உணவு பொருள் தொகுப்பு வழங்கப்பட்டது.திருச்சி தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிRtn.சையத் ஷாகீப் நவாஸ்,Rtn.நூர் முகமது தலைமையில் நடைபெற்றது.

 தலைமை ஆசிரியர் ஜீவானந்தம் முன்னிலையில் நடந்த இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி விஷன் நிர்வாக இயக்குனர் ராம் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய நவாஸ் திருச்சி விஷன் ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு உணவு தொகுப்புகளை வழங்குவது வழக்கமாகக் கொண்டுள்ளது. மிகச் சிறப்பான பணி நாங்களும் இந்த வருடம் இணைந்தது மிகுந்த பாக்கியமாக பார்க்கிறோம் என பேசினார். பின்னர் 25 இஸ்லாமிய குடும்பங்களுக்கு உணவு தொகுப்பு(அரிசி,சர்க்கரை, நெய்,காய்கறிகள்,உணவு பொருட்கள்) வழங்கப்பட்டது.

முன்னதாக திருச்சி விஷன் நிர்வாக இயக்குனர் ராம் பேசிய பொழுது அனைத்து மதத்தினருக்கும் அவர்களது பண்டிகையில் அவர்களுக்கு உதவி செய்வது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளோம். நிகழ்வு நடைபெறும் இடம், கூடிய உள்ளவர்கள், கொடுப்பவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றில் பிள்ளைகள் என்பது வெளிப்படுத்துவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என குறிப்பிட்டார்.

இதேபோல் பாலக்கரை பகுதியில் உள்ள ஹோலி ரெடிமர்ஸ் பள்ளியில் 25 இஸ்லாமியர்களுக்கு உணவு தொகுப்புகள் வழங்கப்பட்டது. அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உணவு தொகுப்புகளை பெற்றுக் கொண்டு வழங்கிய நல்ல உள்ளங்களுக்கும் திருச்சி விஷன் அறக்கட்டளைக்கும் நன்றி தெரிவித்தனர். ஹோலி ரெட்டிமர்ஸ் பிரைமரி பள்ளி தலைமையாசிரியை அருட்சகோதரி கிரேஸி வனஜா ராணி கலந்து கொண்டார்.

ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்வதே ரம்ஜான் நோன்பின் நோக்கம். அத்தகைய நன்னாளில் மிகவும் ஏழ்மை மிக்க வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், விதவை பெண்களுக்கு உதவும் வகையில் திருச்சி விஷன் அறக்கட்டளை இந்த பரிசு தொகுப்பு வழங்கியது.

 #திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision