கீழே கிடந்த மதுவை குடித்த தொழிலாளி மரணம்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டை அன்னை நகரை சேர்ந்தவர் ஜெயா (60). இவரது கணவர் அண்ணாதுரை (70) இவர் பாத்திரம் அடைக்கும் வேலை செய்து வருவதாகவும், சம்பவத்தன்று ஜெயா தங்கை மகள் பூங்கொடி தங்கள் தெருவில் உள்ள பைப்பிற்கு தண்ணீர் பிடிக்க சென்ற போது அருகில் இருந்த புளியம் மரத்தின் அடியில் டப்பாவுடன் கூடிய பிராந்தி பாட்டில் ஒன்று இருந்து உள்ளது.
அதனை பூங்கொடி எடுத்து வந்து பெரியப்பா அண்ணாதுரையிடம் கொடுத்ததாகவும், அதை வாங்கி கொண்டு அண்ணாதுரை சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து அண்ணாதுரை தனது வீட்டு மாட்டு கொட்டகையில் வந்து உட்கார்ந்தவர் திடீரென மயங்கி விழுந்து உள்ளார்.
உடனே அண்ணாதுரை குடும்பத்தினர் என்னவென்று சென்று பார்த்த போது அண்ணாதுரை இடுப்பில் சரக்கு பாட்டில் பாதி குடித்துவிட்டு வைத்திருந்து உள்ளார். அதை எடுத்து பார்த்த போது அது ஊதா கலரில் இருந்து உள்ளது. உடனே அண்ணாதுரையை 108 ஆம்புலன்ஸ் மூலம் துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற சிகிச்சைக்காக சேர்த்தப்போது அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து ஜெயா திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதற்கிடையில் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினார்கள் அரசு மதுபானத்தை குடித்துதான் அண்ணாதுரை இறந்துள்ளார். விஷ சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கியது போல் அண்ணாதுரை இறப்பிற்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.
இதற்கு போலீசார் அவர் குடித்தது மதுவில் கீழே கிடந்து எடுத்து வந்து குடித்துள்ளார். அந்த மதுவை யாரோ ஒருவர் தற்கொலை செய்வதற்காக அதில் விஷத்தை கலந்து குடிப்பதற்காக வைத்திருந்தவர். திடீரென மன மாறி அப்படியே வைத்து விட்டு சென்றிருக்கலாம் அப்படி வைத்து விட்டு சென்ற மதுவைதான் அண்ணாதுரை குடித்துள்ளார். மேலும் அந்த மது ஊதா கலரில் உள்ளது. அதனால் அரசு மதுபானம் குடித்து அவர் இறக்கவில்லை. யாரோ மதுவில் விஷத்தை கலந்து வைத்ததை அண்ணாதுரை எடுத்து குடித்ததால் தான் இறந்துள்ளார் எனக் கூறி சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision