பிச்சை எடுக்கும் பெண்ணின் 3 வயது குழந்தையை கடத்திய பிச்சைக்காரன் கைது - திருச்சியில் பரபரப்பு

பிச்சை எடுக்கும் பெண்ணின் 3 வயது குழந்தையை கடத்திய பிச்சைக்காரன் கைது - திருச்சியில் பரபரப்பு

திருச்சி சந்திரம் பேருந்து நிலையம் பகுதியில் பூபதி என்ற பெண் தனது 3 பெண் வயது குழந்தையுடன் பிச்சை எடுத்து வந்துள்ளார். குழந்தையை பக்கத்தில் வைத்து விட்டு அயர்ந்து பூபதி தூங்கி விட்டார். பின்னர் எழுந்து பார்த்த போது குழந்தையை காணவில்லை. இது குறித்து கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தையை உறையூர் கீழ வைக்கோல்கார தெருவை சேர்ந்த பாண்டியன் (47) என்பவர் கடத்தி சென்றது தெரிய வந்தது. பிச்சை எடுக்கும் பாண்டியனை பிடித்து நடத்திய விசாரணையில் குழந்தையை வௌியூருக்கு கடத்தி சென்று பிச்சை எடுக்க வைத்து பணம் சம்பாதிக்க நினைத்ததாகவும், இதனால் தான் குழந்தையை துாக்கி சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் குழந்தையை திருச்சி ரயில் ஜங்ஷனுக்கு அழைத்து சென்ற பாண்டியன் மது போதை அதிகமானதால் குழந்தையை விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து ரயில்வே போலீசார் தனியாக இருந்த குழந்தையை மீட்டு சைல்டு லைனில் ஒப்படைத்தனர். பின்னர் விசாரணைக்கு பிறகு தாய் பூபதியிடம் குழந்தையை ஒப்படைத்த கோட்டை போலீசார் பாண்டியனை கைது சிறையில் அடைத்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81