திருச்சியில் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்புணர்ச்சி செய்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

திருச்சியில் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்புணர்ச்சி செய்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

திருச்சி சிந்தாமணியைச் சேர்ந்த பெண்மணி தனது ஆறு வயது மகள் Cruew School of Dance-ல் நடன பயிற்சி பெற்று வந்ததாகவும், 30.05.2019 அன்று மாலை 06.00 மணிக்கு பயிற்சி முடித்த மகளை அழைக்க சென்ற போது பதற்றத்தில் இருந்த தனது மகள் டான்ஸ் மாஸ்டர் 
சரவணக்குமார் என்பவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதால் தனக்கு உடம்பு வலிப்பதாக கூறியதை கேட்டு தனது கணவரை அழைத்து கொண்டு 31.05.2019 அன்று கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மேற்படி எதிரி சரவணக்குமார் மீது புகார் கொடுத்தார்.

இந்த பேரில் கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி வழக்கினை புலன் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு எதிரியை அன்றைய தினமே கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவ்வழக்கின் புலன் விசாரணை முடிந்து எதிரி மீது இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் திருச்சிராப்பள்ளி 
மகிளா நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவத்சன் விசாரணையை முடிந்தது.

இன்று 27.07.2021-ம் தேதி எதிரி சரவணக்குமாருக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376(AB)-ன்படி 20 வருட கடுங்காவல் சிறைதண்டனையும், அபராதம் ரூ.3000-ம் கட்டத் தவறினால் ஒரு வருடம் சிறை தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நஷ்டஈடாக ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும் 
என்று தீர்ப்புரை வழங்கினார்.

இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் வெகுவாக 
பாரட்டினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81