பெண் காவலர் மீது பாட்டில் வீச்சு - வாலிபர் மீது வழக்கு பதிவு!!

பெண் காவலர் மீது பாட்டில் வீச்சு - வாலிபர் மீது வழக்கு பதிவு!!

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று வஉசி பேரவையினர் சார்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அதில் கலந்து கொண்ட இளைஞர்கள் போதையில் தகாத வார்த்தைகளில் பேசிக் கொண்டும், அங்கு பணியில் இருந்த பாலக்கரை காவல் நிலைய பெண் காவலர் ருக்மணி மீது மது பாட்டில் விட்டு அடித்ததில் அவருடைய கை காயமடைந்தது.

Advertisement

இதையடுத்து பெண் காவலர் ருக்குமணி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் வஉசி பேரவையில் கலந்துகொண்டு மது பாட்டிலில் அடித்த கல்லணை ரோடு சர்க்கார் பாளையத்தை சேர்ந்த கணேசமூர்த்தி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement