திருச்சியில் மாபெரும் கபடி போட்டி: மாநிலம் முழுவதும் 65 அணிகள் பங்கற்பு:

திருச்சியில் மாபெரும் கபடி போட்டி:  மாநிலம் முழுவதும் 65 அணிகள் பங்கற்பு:

திருச்சி தென்னவன் கபடி குழுவினரால்
மாபெரும் கபடி தொடர் போட்டி  வடக்கு பிள்ளையார் கோவில் தெரு காட்டூரில் நடைபெற்றது.

இவ்விழாவில்  M.முருகானந்தம்,ஹிமாயின் கபீர்,பிரசன்னா பாலாஜி,குணசீலன்,ராஷ்ட்ரியா ரத்னா, V Drat பொது மேலாளர் ஆண்டணிய்யப்பன், ராஜசேகரன், கொட்டப்பட்டு A.பழனிவேல்  மேலூர் குணா , காத்தான் பிள்ளை,பி.ஆர்.பிரேம் , டெல்லி ப்ரோ கபடி வீரர் சந்திரன் ரஞ்சித் தபாங் ,புரோ கபடி பிளேயர் தமிழ் தலைவாஸ் அஜித்குமார் மற்றும் திருச்சி முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

போட்டியின் முதல் பரிசாக 33,000ஆயிரம் இரண்டாம் பரிசாக ரூ 25,000 மூன்றாம் பரிசாக 15,000ம் நான்காம் பரிசாக 15,000  வழங்கப்பட்டது. சிறந்த வீரர்களுக்கு சிறப்பு பரிசுகளாக தங்க நாணயம், தொலைக்காட்சி, பீரோ, இரும்பு கட்டில், சைக்கிள் என பல பரிசுகள் வழங்கப்பட்டது.தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் சுமார் 65 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. முதல் பரிசினை திருவாரூர் வடவூர் அணி தட்டி சென்றது.

மேலும் சிறந்த அணிகளுக்கு தலா 5,000 ரூபாய் வீதம் வழங்கப்பட்டது. இவ்விழாவினை  கிராம முக்கியஸ்தர்கள்,  ஹார்ட் ஆப் அப்துல் கலாம்  நண்பர்கள்,காட்டூர் பி.ஆர் ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் விழாக்குழுவினர் இணைந்து நடத்தினர்.