கொரோனா காலகட்டத்திலும் கமிஷன் அடிச்சது அதிமுக அரசு என திண்டுக்கல் லியோனி பரப்புரை

கொரோனா காலகட்டத்திலும் கமிஷன் அடிச்சது  அதிமுக அரசு என திண்டுக்கல் லியோனி பரப்புரை

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் கொரோனா காலகட்டத்தில் உங்களுக்கு பல உதவிகளை செய்தவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாரம்பரியமான குடும்பத்தை சேர்ந்தவர் மூன்று தலைமுறையாக அவர்கள் குடும்பத்துடன் உறவுமுறை தொடர்கிறது.

தற்போது மகேஷ்யை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் குமார் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் என்று சொல்லுகிறார்கள். அவரிடம் கேட்டால் அவர் இருந்தாரா என்ற அளவிற்கு அவருடைய பணி உள்ளது. திருவெறும்பூர் பகுதிக்குக்  அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும்போது வந்தது கிடையாது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மகேஷ் எல்லா காலகட்டத்திலும் உங்களுக்கு உதவிகளையும் செய்துள்ளார் .

கொரோனா காலகட்டத்திலும் பிளீச்சிங் பவுடர், படுக்கையில் கமிஷன் அடிச்ச ஒரே அரசு எடப்பாடி  தலைமையிலான அதிமுக அரசு. உயிர் காக்கும் நேரத்தில் கூட மக்களை காப்பாற்றாமல் கமிஷன் அடித்தவர்கள் என்றார்.

தற்போது முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் அனைவரும் தேர்தல் பரப்புரையில் கண்ணீர் வடித்து வருகின்றனர். நீட் தேர்வில் பலர் மாணவர்கள் உயிரிழந்த போது ஒருவர் கூட கண்ணீர் வடிக்க வில்லை என தெரிவித்தார். மகேஷ் 65 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என தொடர்ந்து வாக்குகளை கேட்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW