திருச்சியில் கடந்த 2 நாட்களில் பெய்த மழையின் அளவு!!

திருச்சியில் கடந்த 2 நாட்களில் பெய்த மழையின் அளவு!!

திருச்சியில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக மண்ணச்சநல்லூர் வாத்தலை பகுதியில் 15.80 மி.மீ. மழை அளவு பதிவாகி இருந்தது. மாநகரத்தில் டவுன் பகுதியில் 16 மி.மீ. மழை பதிவாகிய நிலையில் மொத்தம் 173.6 மி.மீ., சராசரியாக 6.94 மி.மீட்டர்., மழை அளவு பதிவாகி இருந்தது. 

Advertisement

நேற்று அதிகபட்சமாக மருங்காபுரி பகுதியில் 14.20 மில்லி மீட்டர் மழை அளவும், மாநகரத்தில் ஏர்போர்ட் பகுதியில் .40 மழை அளவு பதிவாகி இருந்தது. மொத்த 23.40 மி.மீ., என்ற நிலையில் சராசரியாக 0.94 மழை அளவு பதிவாகி இருந்தது. 

Advertisement

மழை குறித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு கூறும்பொழுது... இந்த ஆண்டு சராசரி மழை பொழிவில், 30 சதவீத மழை மாவட்டத்தின் வடக்கு பகுதியில் பெய்துள்ளது. திருச்சி மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் போதிய அளவு மழை இல்லை. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 20 சதவீதம் குறைந்து உள்ளது. மழையினால் திருச்சி சாலைகள் சாலைகள் சேதமடைந்து உள்ளது. மாநகராட்சி சாலைகள் சீரமைக்க 38 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. நகராட்சி மற்றும் டவுன் பஞ்சாயத்து சாலைகள் சீரமைக்கும் பணி, அதற்கான நிதி பெறப்பட்டு மழை காலம் முடிந்த பின்பு பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் என்று அவர் கூறினார்.