மாற்றுத்திறனாளி பெண் ஊராட்சி ஊழியரின்குடும்பத்தை மது போதையில் தாக்கிய சகோதரர்கள்: நடவடிக்கை எடுக்காத போலீசார்

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே ஊராட்சி ஊழியரான பெண் மாற்றுத்திறனாளி குடும்பத்தை மது போதையில் தாக்கிய சகோதரர்கள்.
மூன்று நாட்கள் சென்றும் நடவடிக்கை எடுக்காமல் போலீசார் சமரசம் பேச்சுவதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றச்சாட்டு திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள அரசலூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சங்கர் (45). இவர் அரசலூர் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி கீதா(40).
மாற்றுத்திறனாளியான இவர் அதே ஊராட்சியில் பம்ப் ஆப்பரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியின் மகள் ராஜேஷ்வரி (18) முசிறி அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ பொருளியல் மூன்றாம் வருடம் படித்து வருகிறார்.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசலூரில் உள்ள ஊராட்சி ஆழ்துளை மோட்டாரில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் சீரான குடிநீர் வினியோகம் இல்லாமல் இருந்து வந்துள்ளது.
இதுகுறித்து ஊராட்சி செயலர் சரவணனிடம் அப்பகுதி பொதுமக்கள் முறையிட்டுள்ளனர். இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை மாலை அரசலூர் அண்ணாநகரை சேர்ந்த சுந்தரராஜ் மகன்கள் கருணாகரன் (28)குணா (25) இருவரும் மது போதையில் பம்ப் ஆப்பரேட்டர் கீதா வீட்டிற்கு சென்று நீதானே தண்ணீர் திறந்துவிடுற எங்க ஏரியாவுக்கு தண்ணீர் சரியா வருவதில்லை.
நீ என்ன வேலை பார்க்கிறாய் என கேட்டு தகாத வார்த்தைகளால் வசைப்பாடியுள்ளனர். அப்போது கீதாவின் மகள் ராஜேஸ்வரி தட்டிக்கேட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த சகோதரர்கள் இருவரும் மாற்றுத்திறனாளி கீதா, மகள் ராஜேஸ்வரி இரண்டு பேரையும் அடித்து உதைத்து தாக்கியதுடன் வீட்டையும் சூறையாடியுள்ளனர்.இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தகராறை தடுத்து நிறுத்தியதுடன் இந்த சம்பவத்தில் காயமடைந்த தாய், மகள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தொட்டியம் போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி கீதா அவரது மகள் ராஜேஸ்வரி ஆகியோரிடம் புகார் பெற்றுக்கொண்டு சென்றுள்ளனர்.இருப்பினும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு நடவடிக்கை மேற்கொள்ளாமல் சமரச பேச்சுவார்த்தை செய்து வருவதாக பாதிக்கப்பட்ட குடம்பத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision