"உங்களைத் தேடி உங்கள் ஊரில்"திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம் பி பெரியபட்டி கிராமம் வளர்ந்த நகரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வைப்பறையுடன் கூடிய சமையலறை கட்டிடம் கட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் பார்வையிட்ட ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் அதே ஊராட்சி பகுதியை சேர்ந்த வி பெரியபட்டி கிராமம் அதிகாரம் பட்டியில் MGNREGS திட்டத்தின் கீழ் நடைபெறும் Horticuluture plantation பணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் இத்திட்டத்தின் கீழ் பார்வையிட்டார்.
கோட்டை பூலாம்பட்டி அங்கன்வாடி மையத்திற்கு சென்ற மாவட்ட ஆட்சியர் அவர்கள் இத்திட்டத்தின் கீழ் நேரில் பார்வையிட்ட ஆய்வு மேற்கொண்டார். மதலைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் இத்திட்டத்தின் மூலம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision