திருச்சியில் செல்போன் திருடியவர்கள் கைது

Apr 9, 2022 - 01:55
Apr 9, 2022 - 04:40
 552
திருச்சியில் செல்போன் திருடியவர்கள் கைது

திருச்சி ரயில்வே ஸ்டேஷன் மற்றும் அதனை சுற்றியுள்ள கண்டோன்மெண்ட், அமர்வு நீதிமன்றம், எடமலைப்பட்டிப்புதூர் மற்றும் கே.கே.நகர் ஆகிய காவல் நிலைய பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து செல்போன்களை பிக்பாக்கெட் அடித்து சென்ற 10 நபர்கள் கைதுசெய்யப்பட்டு அவர்களிடமிருந்து செல்போர்கள் பறிமுதல் செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.

 

திருச்சி மாநகரத்தில் செல்போன்களை பிக்பாக்கெட் அடித்துசென்ற தஞ்சாவூரை சேர்ந்த ராஜா (எ) முத்துமணிகண்டன், அரவிந்தகுமார், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த குணசேகரன் ஆகிய எதிரிகள் ரயில்வே ஸ்டேஷன் கண்டோன்மெண்ட் பகுதியிலும், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இஸ்மாயில் என்ற எதிரி அகில இந்திய வானொலி நிலையம் அருகில் அமர்வு நீதிமன்றம் பகுதியிலும், ராம்ஜிநகரை சேர்ந்த பவித்ரன், கோயப்புத்தூரை சேர்ந்த வெங்கடேசன், மதுரையை சேர்ந்த லதா மற்றும் ராமு (எ) ராஜு ஆகிய எதிரிகள் எடமலைப்பட்டிப்புதூர் பகுதியிலும், மதுரையே சேர்ந்த ஜாக்கி (எ) பிரசாந்த் மற்றும் பாலக்கரையை சேர்ந்த ஜெயசிலன் ஆகிய எதிரிகள் கே.கே.நகர் பகுதியிலும் செல்போன்களை பிக்பாக்கெட் அடித்து சென்ற 7 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 10 எதிரிகளை கைது செய்து, அவர்களிடமிருந்து 10 செல்போன்களை பறிமுதல் செய்தும், பொதுமக்களை அச்சுறுத்திவந்த சம்பந்தப்பட்ட மேற்படி எதிரிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களை அச்சுறுத்தி செல்போன்களை பறித்துசென்ற குற்றச் சம்பவங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் சிறப்பாக புலன்விசாரணை மேற்கொண்டு, சம்மந்தப்பட்ட எதிரிகளை கைது செய்து, பொதுமக்களிடம் பறித்துசென்ற செல்போன்களை மீட்டு சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்.

மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்று பொதுமக்களை அச்சுறுத்தி செல்போன்களை பறித்து செல்லும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO