பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்றால் கடும் நடவடிக்கை மத்திய மண்டல காவல்துறை தலைவர் அதிரடி உத்தரவு

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்றால் கடும் நடவடிக்கை மத்திய மண்டல காவல்துறை தலைவர் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப் பழக்கம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது கடந்த இருபதுஆண்டுகளில் நாட்டின் பெரிய பிரச்னைகளில் ஒன்றாக போதை மற்றும் குடிபழக்கத்திற்கு அடிமையாகும் பழக்கம் அதிகரித்து வருகிறது.இதனை தடுக்கும் விதமாக மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயில்கின்ற மாணவ, மாணவியர் மற்றும் கல்லுரி செல்லும் இளைஞர்கள் ஆகியோர் புகையிலை பழக்கவழக்கங்களுக்கு ஆட்படுவதை தடுக்கும் நோக்கத்தில் சிறு வணிகத்தில் ஈடுபடும் பெட்டிக்கடை மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு  மத்திய மண்டல காவல்துறை தலைவர் வே.பாலகிருஷ்ணன்  பின்வரும்  உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

சிகரெட் புகையிலை மற்றும் பிற போதை பொருட்கள் தடுப்பு சட்டம், பிரிவு 6ன் படி கல்வி நிறுவனங்களின் அருகே 100 மீட்டர் தொலைவிற்குள் செயல்படும் சிறு பெட்டிக்கடை மற்றும் சில்லறை வியாபாரக் கடைகளில் அரசால் தடை செய்யயப்பட்டுள்ள புகையிலை பொருட்கள், சிகரெட், குட்கா, பான்பராக் மற்றும் இதர போதைப் பொருட்களை விற்பனை செய்ய கூடாது. 

மீறி 18 வயதிற்கு குறைவான மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்தால் சிறார் நீதிபரிபாலன (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டப் பிரிவு 77ன் படி பிணையில் வர முடியாத படி வழக்கு பதிவு செய்யப்பட்டு 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை மற்றும் ஒரு லட்சம் அபராதம் செலுத்தும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

மேலும் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுத்தினால் சிறார் நீதிபரிபாலன (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டப் பிரிவு 78ன் படி பிணையில் விடமுடியாத வழக்கு பதிவு செய்யப்பட்டு 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை மற்றும் ஒரு லட்சம் அபராதம் செலுத்தும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

எனவே வணிகர் சங்க நிர்வாகிகள் தங்களது சங்கத்தில் பதிவு பெற்று இயங்குகின்ற சிறு கடை மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு இது குறித்து தேவையான அறிவுரைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU