திருச்சி பிரீஸ் ரெசிடென்சியில் கிறிஸ்துமஸ் விழா கோலாகல கொண்டாட்டம்:

திருச்சி பிரீஸ் ரெசிடென்சியில் கிறிஸ்துமஸ் விழா கோலாகல கொண்டாட்டம்:

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ளது பிரீஸ் ரெசிடென்சி. உயர் தரம் மிக்க சிறப்பு வாய்ந்த திருச்சியின் பெருமைகளை எடுத்துச் சொல்லக்கூடிய ஒரு இடமாகவும் அமைந்துள்ளது பிரீஸ் ரெசிடென்சி.

இங்கு கடந்த 15 வருடங்களாக குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தாண்டும் மிகச் சிறந்த முறையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து கொண்டனர்.மேலும் திருச்சியை சுற்றி உள்ள பல பகுதிகளில் இருந்தும் பலர் வருகை புரிந்தனர்.

குழந்தைகளுக்காக பாட்டுப் போட்டி, நடனப்போட்டி,ஓவியப்போட்டி, மாறுவேடப்போட்டி, என அனைத்திலும் குழந்தைகள் அசத்தியதோடு பலவிதமான விளையாட்டுகளும் உள்ளரங்கம் மற்றும் வெளியரங்கம் ஆகிய இடங்களில் சிறப்பாக நடைபெறுகின்றன.

வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பிரீஸ் ரெசிடென்சி சார்பாக பலவிதமான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் கிறிஸ்துமஸ் தின விழாவில் புன்னகை பொங்க விழாவை கண்டு மகிழ்ந்தனர். இனிவரும் விழாக்களில் திருச்சி மக்களின் பங்கெடுப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். எனவே வரும் நாட்களில் தங்கள் குழந்தைகளோடு இதுபோல் விழாக்களில் கலந்துகொள்ள ஆதரவு தருமாறு பிரீஸ் ரெசிடென்சி சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.