நகர விற்பனை குழு தேர்தல் நாள் வெளியீடு

நகர விற்பனை குழு தேர்தல் நாள் வெளியீடு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிநகர விற்பனை குழு தேர்தல் அறிவிக்கை நடைபாதை வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் நடைபாதை விற்பனை ஒழுங்குபடுத்துதல் சட்டம் 2014 பிரிவு 38 (1)ன் கீழ் பிறப்பிக்கப்பட்ட தமிழ்நாடு நடைபாதை வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு விற்பனையை ஒழுங்குபடுத்துதல் மற்றும் உரிமம் வழங்குதல் திட்டம் 2015-விதியின் கீழ் நகர விற்பனை

குழுவின் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய 6 உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்த உத்தேசிக்கப்பட்டு மாமன்றத்தின் தீர்மானம் எண். 253, நாள். 11.04.2025ல் அங்கீரிக்கப்பட்டுள்ளவாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கீழ்கண்ட விவரம் மற்றும் அட்டவணையின்படி நகர விற்பனை குழு தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. 

 உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படும் விவரம்

  

1 பொது 1   

2 மகளிர் பொது1 

3 மகளிர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 1 

4 தாழ்த்தப்பட்டோர் 1 

5 மாற்றுத் திறனாளிகள் வகுப்பினர் 1 

6 சிறுபான்மையினர் வகுப்பினர் 1 

                 மொத்தம் – 6 எண்ணிக்கை

தேர்தல் விவரம்

வைப்பு தொகை: ரூபாய் 2000/-

வேட்பு மனு பெறப்படும் தொடக்க நாள்

 (காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை) 12.05.2025

வேட்பு மனு விண்ணப்பம் செய்யும் இறுதி நாள் 19.05.2025

வேட்பு மனு பரிசீலனை செய்யும் நாள்

 (காலை 11.00மணி முதல் மாலை 3 மணி வரை) 20.05.2025

வேட்பு மனு திரும்ப பெறும் நாள்

 (மாலை 3 மணி வரை) 21.05.2025

வேட்பாளர் பட்டியல் வெளியிடும் நாள் 22.05.2025

தேர்தல் நடைபெறும் நாள் 30.05.2025

தேர்தல் நடைபெறும் நேரம் காலை 10.00 மணி முதல்

மாலை 5.00 மணி வரை

வாக்குப்பதிவு நடைபெறும் இடம் பிஷப் ஹூபர் மேல்நிலைப்பள்ளி

புத்தூர்

வாக்கு எண்ணிக்கை நாள்/நேரம்: 30.05.2025

மாலை 6.00 மணி முதல்

          மாண்புமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை W.P.(MD) Nos. 20338, 27088 and 29884 of 2024, நாள். 07.03.2025 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பின்படி சாலையோர வியாபாரிகளில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் செய்து இம்மாநகராட்சியின் சாலையோர வியாபாரிகளின் வாக்காளர் பட்டியல் அனைத்து வார்டு குழு அலுவலகங்களின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.    

                                                                                                                        

ஆணையர்,

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision