திருச்சியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் தமிழ்நாடு மாநிலக் குழு கூட்டம் நேற்று நடைப்பெற்றது

திருச்சியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் தமிழ்நாடு மாநிலக் குழு கூட்டம் நேற்று நடைப்பெற்றது

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் நேற்று(13.03.2022) திருச்சியில் மாநில தலைவர் மௌ.குணசேகர் தலைமையில் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் ஆ.பிரகாஷ் கொடியேற்றி வைத்தார்.

மாநில செயலாளர் அரசியல், வேலை அறிக்கைகளை சமர்ப்பித்தார். பேராசிரியர் கதிரவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் திராவிடமணி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

உயர்கல்வித் துறையின் நிர்வாக மற்றும் கல்வியியல் செயல்பாடுகளை இனி ஒன்றிய அரசே தீர்மானிக்கும் என்கிற தேசிய உயர்கல்வி தகுதிக் கட்டமைப்பு வரைவு அறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும். உக்ரைன் - ரஷ்யா போரால் படிப்பை தொடர முடியாத இந்திய மாணவர்களுக்கு கல்வி வழங்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஆசிரியர் பட்டயப் பயிற்சி மாணவர்களுக்கான பருவத் தேர்வுகளில் 100க்கு 98 % பேர் தோல்வி அடைகின்றனர்; இதில் மாநில அரசு உடனடியாக தலையிட்டு சரி செய்ய வேண்டும். தமிழ்நாடு டாக்டர். அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டு சட்டப் படிப்புக்கான (3 Year LLB) 2021-2022ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடத்தாமல் உள்ளதை நடத்த வேண்டும். நீட் தேர்வில் விலக்கு கோரும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் தீர்மானத்தை ஆளுநர் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு உடனே அனுப்ப வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும், கோகுல்ராஜ் கொலை வழக்கில் திறம்பட வாதாடி நீதியைப் பெற்றுத் தந்த வழக்கறிஞர் ப.பா.மோகன் அவர்களுக்கு பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாணவர் பெருமன்ற மாநில துணைத் தலைவர் ஆ.பிரகாஷ், துணைச் செயலாளர் ச.பூர்ணிமா நந்தினி, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் க.இப்ராஹிம், மாநகர் மாவட்ட தலைவர் செல்வகுமார், மாநகர் மாவட்ட பொருளாளர் பாட்ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8


#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO