மலையின் உச்சியில் இருந்து விதை பந்துகளை தூவிய கல்லூரி மாணவ மாணவிகள்

மலையின் உச்சியில் இருந்து விதை பந்துகளை தூவிய கல்லூரி மாணவ மாணவிகள்

உயிரினங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இந்த அழகிய பூமிப்பந்தை பாதுகாக்க வேண்டுமெனில், இனிவரும் நாட்களில் கண்ணில் படும் இடமெல்லாம் விதைப் பந்துகளை வீசிச் செல்லுங்கள் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள். இதை கருத்தில் கொண்டு, கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14 ம் தேதி அன்று மிகுந்த உற்சாகத்துடனும் தேசபக்தி உணர்வுடனும் “மண் உரிமை மற்றும் விதை பந்துகள் தயாரிப்பு” என்ற நிகழ்வானது மிக சிறப்பாக நடைபெற்றது. 

ஒரு வரலாற்று நிகழ்வாக நடத்தப்பட்ட விதை பந்துகள் தயாரிப்பு நிகழ்வில். 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு 15 நிமிடத்தில், ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்து எட்டுநூத்தி இருபத்தி நான்கு விதை பந்துகள் தயாரிக்கும் முயற்சியாக நடைபெற்றது. 1,50,824 என்ற விதை பந்தின் எண்ணிக்கை 15.08.24 என்கின்ற நமது சுதந்திர நாளை குறிப்பிடும் வகையில் அமைக்கப்பட்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது என்பதில் மிகையல்ல.

அதை தொடர்ந்து 1,50,824 விதை பந்துகளை தூவும் நிகழ்வு இன்று அதிகாலையில் தொடங்கப்பட்டது. மாணவ மாணவியர்கள், முசிறி அருகில் 500 செங்குத்து படிகள் மற்றும் இயற்கையால் முழுமையாக மூடப்பட்டிருக்கும் திருஈங்கோய் மலையின் உச்சிக்கு சென்று அங்கிருந்து விதை பந்துகளை தூவும் செயலை தொடங்கினர். “இயற்கை வளம் செழிக்கட்டும் மனித நேயம் வளரட்டும்” என்ற கோஷ முழக்கங்களுடன் மாணவர்கள் விதை பந்துகளை சீரான இடைவெளியில் மலையை சுற்றி தூவி வந்தனர்.

இன்றைய விதை தூவும் நிகழ்ச்சியில நம்முடன் வாழும் உயிரினங்களில் ஒன்றான மனிதனின் நண்பன் என்று அழைக்கப்படும் அழகிய நாய் நமது பயணத்தில் உடன் வந்து அன்பை வெளிப்படுத்திய விதம் மாணவ மாணவியர்களை ஊக்கப்படுத்துவதாக அமைந்தது . எங்களுடன் வந்த நாய் மிகவும் அழகாகவும் விளையாட்டுத்தனமாகவும் இருந்தார்.விதை தூவும் போது யாரும் சோர்வடையாமல் இருக்க அவரது விளையாட்டுத்தனம் உதவியாக இருந்தது. அவர் எப்போதும் எங்களை மிகவும் மகிழ்ச்சியாக வைத்து கொண்டார் என்று சொன்னால் மிகை அல்ல . மேலும் எங்களுடன் வந்த நாய் விதை பந்துகளை தன்னுடைய காலால் தள்ளி தள்ளி விட்ட விதம் மனித நேயத்தை மிஞ்சும் செயலாக அமைந்தது. 

பிரமிப்பின் உச்சமாக ,அழகான இயற்கையின் வடிவமைப்பில் அன்பிற்க்குரிய உயிரினம் எங்களுடன் இணைந்து பயணம் செய்தது மனதில் ஓர் நிழலாக இருக்கும் என்பதில் மகிழ்ச்சி என்று அனைவரும் கூறி மகிழ்ந்தனர் விதை தூவும் மனித நேய நிகழ்ச்சியில் மனிதனை தாண்டி மற்ற உயிரினங்களும் கலந்து கொண்டது மிக பெரிய ஆனந்தததயும் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்வதாக கூறி கொண்டார்கள். வளரட்டும் அன்பு என்றென்றும் .  

‘வளர்ந்தால் மரம்; இல்லையேல் மண்ணுக்கு உரம்’

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision