அறிவியல் மற்றும் மானுடவியல் புலத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா

அறிவியல் மற்றும் மானுடவியல் புலத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா

திருச்சி மாவட்டம் இருங்களூரில் உள்ள SRM நிகர்நிலை பல்கலை கழக அறிவியல் மற்றும் மானுடவியல் புலத்தின் முதலாம் ஆண்டு துவக்க விழா திருச்சி SRM வளாக இயக்குனர் டாக்டர் என். மால் முருகன் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் பெங்களூர் பிலிப்கார்ட் இண்டர்நெட் (பி) லிமிடெட் துணைத் தலைவர் பிரபு பால சீனிவாசன் சிறப்பு விருந்தினராகவும், ஊக்குவிப்பு பேச்சாளர் அருள் பிரகாஷ் கெளரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர். நிகழ்வில் குத்துவிளக்கு ஏற்றி விழா தொடங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர் பிரபு பால சீனிவாசன் கூறுகையில்..... மாணவர்கள் தங்கள் தனி திறன்களை வளர்த்து உலக அளவில் சாதித்து இந்தியாவை பெருமைப்படுத்த வேண்டும் என தெரிவித்தார். 

ஊக்குவிப்பு பேச்சாளர் அருள் பிரகாஷ் கூறுகையில்...... கல்வியின் சிறப்பினைக் கூறி மாணவர்கள் தங்களை உலகிற்கு அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினர்.

நிகழ்வில் வளாகத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் என்.சம்பந்தன், புல முதன்மையர் டாக்டர்.பிரான்ஸிஸ் சேவியர் கிறிஸ்டோபர், SRM ஹோட்டல் மேனேஜ்மென்ட் துணை முதல்வர் பிரின்ஸ் ஆன்டனி மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision