அரசு விழா மேடையில் எம்எல்ஏ அரசியல் பேசி மறைமுக தாக்கு

அரசு விழா மேடையில் எம்எல்ஏ அரசியல் பேசி மறைமுக தாக்கு

திருச்சி மாவட்டத்தில் 1000 பயணிகளுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி 248.61 கோடியில் முடிவுற்ற 524 திட்ட பணிகள் தொடக்க நிகழ்ச்சி, 106 கோடிக்கு புதிய பணிகள் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி மற்றும் 99.26 கோடிக்கு 6176 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர்கள் நேரு, மகேஷ் பொய்யாமொழி, பாராளுமன்ற உறுப்பினர்கள் துரை வைகோ, ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், இனிகோ இருதயராஜ், பழனியாண்டி, சமது, ஸ்டாலின் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகர் காவல் ஆணையர் காமினி, மாநகராட்சி ஆணையர் சரவணன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் பேசுகையில்.... தமிழ்நாடு முதலமைச்சர் வருகிற 15 ஆம் தேதி காலை உணவு திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதியில் பங்கேற்று சிறப்பிக்குமாறு முதல்வரே கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த சட்டமன்ற உறுப்பினராகிய எங்களுக்கு கொடுத்த வாய்ப்பு. அதனை மாவட்ட ஆட்சியர் நாங்கள் (சட்டமன்ற உறுப்பினர்) செய்வதற்கு அந்த வாய்ப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என மேடையில் அரசியல் பேசி சென்றார்.

அமைச்சர் நேரு நாகரிகம் கருதி அரசியல் பேசாமல் சென்றிருக்கிறார். சட்டமன்ற உறுப்பினர் விடுவதாக தெரியவில்லை. தொடர்ந்து தனக்கான உரிமையை பெறுவதில் கிடைக்கும் இடங்களில் எல்லாம் கேப்பில் கிடா வெட்டிக்கொண்டு உள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision