சமயபுரம் மற்றும் வெக்காளியம்மன் கோயில் நன்னீராட்டு விழா முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் ஆலோசனை கூட்டம்

சமயபுரம்  மற்றும் வெக்காளியம்மன் கோயில் நன்னீராட்டு விழா முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் ஆலோசனை கூட்டம்

 திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் மற்றும் உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில்களில் வருகின்ற 06.07,2022 புதன்கிழமையன்று திருந்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெறுவதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்மா,பிரதீப் குமார். தலைமையில் இன்று (24.06.2022) நடைபெற்றது.

 இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆலோசனை வழங்கி பேசியதாவது. சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் மற்றும் உறையூர் அருள்மிகு

வெக்காளியம்மன் திருக்கோயில்களில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா தடைபெறுவதையொட்டி பெருமளவில் பக்தர்கள் வருகை தருவதை முன்னிட்டு தேவைப்படும் இடங்களில் சின்டெக்ஸ் டேங்க் நிறுவி, குடிநீர் வசதி செய்து கொடுத்தல், போதிய கழிவறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், குப்பைகளை அகற்றியும், பக்தர்கள் வரும் பாதைகளில் சுகாதாரப் பணிகளையும் செய்திட வேண்டும். பக்தர்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி நெரிசலின்றி சுவாமி தரிசனம் செய்திடவும், கண்காணிப்புக் கோபுரம் அமைத்தல், தேவையான இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள்

பொருத்துதல், தற்காலிக காவல் நிலையம், காவல்துறை கட்டுப்பாட்டு அறைகள்,பக்தர்களுக்கு பாதுகாப்பு, போக்குவரத்துக் கண்காணிப்பு மற்றும் விபத்துத் தடுப்பு ஆகியநடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

 பக்தர்களுக்குத் தேவையான முதலுதவிஉபகரணங்கள், மருத்துவ வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்துதல் மற்றும்உரிய மருத்துவர் மற்றும் மருத்துவர்களுடன் கூடிய மருத்துவ முகாம் நடத்துதலைமேற்கொள்ள வேண்டும். தீயணைப்பு வாகனத்தினை ஆயத்த நிலையில் நிறுத்திட வேண்டும்.

பக்தர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்வதோடு, பேருந்து மற்றும் வாகனம் நின்று செல்லும் இடங்களையும் கண்டறிந்து போதிய பணியாளர்களுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும். 

தரமான வகையில் அன்னதான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும். சாலைகளை செப்பனிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி பக்தர்களுக்கு சிரமமின்றி வருவதற்கு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். திருக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலைக்கு ஏற்படுத்தப்படும் தற்காலிக மின் இணைப்புகளை மின் ஆய்வாளர் பார்வையிட்டு ஆலோசனை வழங்கி உரிய தகுதிச் சான்றிதழ் வழங்கிட வேண்டும்.

 தங்குதடையின்றி மின் வினியோகம் செய்ய வேண்டும், மேலும், பழுது ஏற்பட்டால் உடனே தேவையான அளவு பணியார்களை நியமிக்க வேண்டும், திருக்குட நன்னீராட்டு பெருண்ழா சிறப்பாக நடைபெற அனைத்து அலுவலர்கள் தேவைப்படும் முன்னேற்பாடு நடவடிக்களை

மேற்கொள்ள வேண்டும். சமயபுரம். அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் மற்றும் உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில்களில் வருகின்ற 06.07.2022 அதிகாலை முதல் இரவு வரை கூடுதல் கவனத்துடன் தொடர்புடைய அலுவலர்கள் தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பேசினார்,

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் சி கலயாணி, செல்வராஜ். துணை ஆணையர் க.ஞானசேகரன் மற்றும் இத்திருக்கோயில்களின் அலுவலர்கள் தொடர்புடைய துறைகளின் அலுவலர்கள், திருக்கோயில் பக்தர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO