ஊழியர் ஒருவருக்கு கொரோனா! மூடப்பட்ட முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்!!

ஊழியர் ஒருவருக்கு கொரோனா! மூடப்பட்ட முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்!!

திருச்சி மாவட்டம் முசிறி ஊராட்சி ஒன்றியத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஒன்றிய அலுவலகம் மூடப்பட்டது.

திருச்சி மாவட்டம் முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனோ தொற்று உறுதியானதை அடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

முசிறி பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் கிருமி நாசினி மருந்து தெளித்து அலுவலக வளாகத்தை சுத்தப்படுத்தினர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு உத்தரவின்பேரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாளர்களுக்கு கொரோனோ தொற்று பரிசோதனை 50 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

இதில் கணினி ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அந்த ஊழியர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். அவரது குடும்பத்தினருக்கு கொரோனோ பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாக மருத்துவ அலுவலர்கள் தெரிவித்தனர். அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் மூன்று நாட்களுக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இச்சம்பவம் அலுவலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய….https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP