திருச்சியில் முதல்முறையாக கார்ப்பரேட் லீக் உள்ளரங்க கிரிக்கெட் போட்டி:

திருச்சியில் முதல்முறையாக கார்ப்பரேட் லீக் உள்ளரங்க கிரிக்கெட் போட்டி:

திருச்சி தேசியக் கல்லூரி உடற்கல்வி துறை சார்பாக கார்ப்பரேட் லீக் என்னும் உள்ளரங்க கிரிக்கெட் போட்டி தேசியக் கல்லூரி உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இப்போட்டி முதல் நாளான இன்று வெகுவிமர்சையாக தொடங்கப்பட்டது. இதில் 20க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் கம்பெனிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இவ்விழாவினை தேசியக் கல்லூரி செயலர் ரகுநாதன், செயின்ட் ஜோசப் கல்லூரியின் துணை முதல்வர் அலெக்ஸ் மற்றும் VDart பொதுமேலாளர் ஆண்டனி ஈப்பன்  ஆகியோர் கலந்து கொண்டு முதல் நாள் விழாவினை துவக்கி வைத்தனர்.

இவ்விழாவானது ஒரு நல்லெண்ணம் அடிப்படையிலும் அனைவருக்கும் ஒரு சகோதரத்துவம் மற்றும் நட்பை உருவாக்கும் விதமாக இவ்விளையாட்டானது நடைபெறுகிறது. இவ்விழாவின் இறுதிப் போட்டி வருகிற 29-ஆம் தேதி நடைபெற உள்ளது. இறுதி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளும் மற்றும் சிறப்பு அழைப்பாளராக ரவி முருகையா கலந்து கொள்ள உள்ளார்.

மேலும் இவ்விழாவினை தேசியக் கல்லூரி உடற்கல்வி துறை பிரசன்ன பாலாஜி மற்றும் உடற்கல்வி துறை பேராசிரியர்கள் ஒருங்கிணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.